மாத்­த­றையில் இருந்து வவு­னியா நோக்கி பய­ணித்த ரஜ­ரட்ட ரெஜின புகை­யி­ர­தமும் கண்­டி­யி­லி­ருந்து மாத்­தறை நோக்கி பய­ணித்த 872 ஆம் இலக்க கடு­கதி புகை­யி­ர­தமும் கிந்­தோட்டை தர்­ம­பால பாட­சாலை அருகே ஒரே தண்­ட­வா­ளத்தில் பய­ணித்­ததால் நேற்று பாரிய விபத்­தொன்று ஏற்­பட இருந்­தது.

எனினும் இரு ரயில்­க­ளுக்கும் சுமார் 10 அடி மட்­டுமே தூரம் இருந்த நிலையில் நிறுத்­தப்­பட்­டதால் இந்த பாரிய விபத்து மயி­ரி­ழையில் தவிர்க்­கப்­பட்­டது.

GInthota-3

ஒரு ரயில் முன்­கூட்­டியே வரு­வதை அவ­தா­னித்­துள்ள ரயில்வே கடவை ஒன்றின் ஊழியர் ஒருவர் தூரத்தில் இருந்தே சத்­த­மிட்­ட­வாறு சிவப்புக் கொடியை அசைத்­த­தினால் இரு ரயில்­களும் நிறுத்­தப்­பட்டு விபத்து தவிர்க்­கப்­பட்டுள்ளது.

இவ்­விரு ரயில்­களும் கிந்­தோட்­டையில் தண்­ட­வாளம் மாற வேண்­டி­யி­ருந்த நிலை­யி­லேயே ஒரு ரயில் சமிக்­ஞை­களை பொருட்­ப­டுத்­தாது பய­ணித்­த­மையே இந்த நிலைமை ஏற்­படக் காரணம் என ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

GInthota-1இந் நிலையில் இந்த சம்­பவம் தொடர்பில் விசா­ரணைச் செய்ய மூவர் கொண்ட குழு­வொன்­றினை ரயில்வே திணைக்­களம் நிய­மித்­துள்­ளது.

கண்­டியில் இருந்து மாத்­தறை நோக்கி பய­ணித்த கடு­கதி புகை­யி­ரதம் சமிக்­ஞை­களை பொருட்­ப­டுத்­தா­மையே இந்த விபத்து நிலைமை ஏற்பட காரணம் என தெரி­விக்கும் புகை­யி­ரத திணைக்­களம் அது குறித்த மேல­திக விசாரணைகளுக்காக அந்த புகையிரதத்தின் சாரதி, உதவி சாரதி, கடவை காவலாளி மற்றும் உதவி கடவை காவலாளி ஆகியோரை பணி இடை நிறுத்தம் செய்துள்ளது.

Share.
Leave A Reply