முன்னைய அரசாங்கத்தின் இராஜதந்திரியும் வர்த்தகருமான ஏ.எஸ்.பி.லியனகே யின் பீ கொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டுள்ள மணல் நேற்று முற்றாக அகற்றப்பட்டது.
ஏ.எஸ்.பி.லியனகேயின் நாவல பீகொக் மாளிகையில் மணலால் நிரப்பப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான தங்கம் உள்ளதாக கதைகள் உலா வரும் நிலையில் அது குறித்து அவர் பொலிஸ் மா அதிபரி டம் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசா ரணை இடம்பெறும் நிலையிலேயே அதன் ஒரு அங்கமாக இந்த மணல் அகற்றப்பட்டது.
இது குறித்து விசாரணை செய்து வரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் மேற்பார்வையில் இவ்வாறு இந்த மணல் அகற்றப்பட்டதுடன்
அங்கு எவ்வித தங்கமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விஜித் குணரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் இராஜகிரிய பொலிஸாரின் மேற்பார்வைக்கு மத்தியிலேயே இந்த மணல் அகற்றப்பட்டது.
ஏற்கனவே ஏ.எஸ்.பி.லியனகேயின் முறைப்பாட்டுக்கு அமைய அவரிடம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இரு மணி நேரம் விசாரணைகள் நடத்தப்பட்டன. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு இந்த விசாரணைகளை நடத்தி வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்தது.
ஏ.எஸ்.பி.லியனகேயின் நாவல பீகொக் மாளிகையில் மணலினால் நிரப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தில் தங்கம் உள்ளதா என்பது குறித்து எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் தமக்கு அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதையடுத்தே இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் குறித்த நீச்சல் தடாகத்தில் 35 கியூப் மணல் ஏ.எஸ். பி.லியனகேயின் செலவில் பணிக்கு அமர்த்தப்பட்ட 10 ஊழியர்களால் அகற்றப்பட்டது.
அவர்கள் இந்த பணில் ஈடுபடுத்தப்பட முன்னர் அந்த நீச்சல் தடாகத்தில் இருந்த மணலின் மாதிரிகள் பெறப்பட்டன. பின்னர் அவ்வூழியர்களின் உடலில் இருந்த அனைத்து தங்க ஆபரணங்களும் அகற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்தே ஒவ்வொரு பக்கட்டுக்களாக மணல் அள்ளப்பட்டது. அதன் பின்னர் பெக்கோ இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது. காலை 10.00 மணியளவில் அரம்பித்த இந்த நடவடிக்கைகள் மாலை 5.00 மணி வரை நீடித்திருந்தது.
மணல் அகற்றப்பட்டதன் பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஏ.எஸ்.பி.லியனகே தற்போது தனக்கு மன நிறைவாக உள்ளதாகவும் வீணான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டதால் அதிலிருந்து தற்போது விடுதலை கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தோண்டபடுகிறது பீகொக் மாளிகையின் மண் தடாகம்.
வர்தகரான ஏ.எஸ்.பி.லியனகேவுக்கு சொந்தமான நாவல பிரதேசத்தில் உள்ள மயில் மாளிகையில் அமைந்துள்ள மூடப்பட்ட நீச்சல் தடாகத்தில் உள்ள மண்ணை அகற்றும் பணிகள் இன்று இடம்பெற்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, இந்த மயில் மாளிகையை மஹிந்த ராஜபக்ஷ தங்குவதற்கு வழங்க லியனகே தயாராகியிருந்த போதும் பின்னர் அது கைவிடப்பட்டிருந்தது.
மயில் மாளிகையை மஹிந்தவுக்கு வழங்குவதற்காக அங்கிருந்த நீச்சல் தடாகம் மண் கொண்டு மூடப்பட்டது.
அதனையடுத்து, குறித்த நீச்சல் தடாகத்தில் தங்க கட்டிகள் புதைக்கப்பட்டுள்ளதாக வாய்வழி கதைகள் பரவியிருந்தன.
அதற்கமைய, கொழும்பு குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் முன்னிலையில், குறித்த நீச்சல் தடாகத்தில் மண்ணை அகற்றும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.