1.5 டொன் நிறையினை உடைய 10 வாகனங்களை தனது உடலில் ஏறி பயணிக்க வைத்து கின்னஸ் சாதனை படைக்கவிருந்த கொழும்பு துறைமுக பணியாளர் ஒருவர் நேற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் போது உடலின் மீது மூன்றாவது வாகனம் ஏறி செல்ல முற்பட்ட போது, திடீர் என அவரது உடலில் சிறிது நேரம் வாகனம் நின்றதன் காரணமாக அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு கின்னஸ் சாதனை படைக்கவிருந்தவர், பல கின்னஸ் சாதனைக்கு சொந்தகாரரான ஹங்குராங்கெத்த பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான ஜானக காஞ்சன முதன்நாயக்க என்பவர் ஆவர்.

இயந்திர பராமரிப்பு பிரிவில் சேவை புரியும் இவர், நேற்று கின்னஸ் சாதனையை படைக்கவிருந்ததை பார்வையிடுவதற்கு துறைமுக அமைச்சர் அர்ஜூன ரனதுங்க மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் மோதரை பயிற்சி நிறுவனத்திற்கு வந்திருந்தனர்.

எனினும் மூன்றாவது வாகனம் அவர் மீது ஏறும் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பின்னர் மீண்டும் அவர் குறித்த கின்னஸ் சாதனையை படைக்க முற்பட்ட போது, அவரின் உயிர் முக்கியம் என கூறி அவரது வேண்டுகோளுக்கு அதிகாரிகள் இணங்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் அவர் தனது வலது கையின் மீது 32 வாகனங்களை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்ததுடன், விரல்கள் மூலம் பொருட்களுடன் கூடிய புகையிரதம் ஒன்றை மூன்று மேடைகள் தள்ளி கின்னஸ் சாதனைப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் வெளியான வீடியோ..

Share.
Leave A Reply