தனது மகனுக்கு பதிலாக தன்னை சிறை பிடித்திருந்தால் அது சிறந்த விடயமாக இருந்திருக்குமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது புதல்வர் யோஷித ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக வெலிகடை சிறைச்சாலைக்கு சென்ற அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளிடம் பழிவாங்கினால் பரவாயில்லை என தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, பிள்ளைகளை பழிவாங்குவது தவறான விடயம் தனது மகன் யோஷித எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில முதுமாணிப்பட்டத்திற்கான பரீடசைக்கு தோற்றவுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனநிலை எப்படி இருக்கும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ் கேள்வி எழுப்பினார்.”கார்டன் ஸ்போட்ஸ் நெற்வெர்க்” நிறுவனம் தொடர்பிலான வழக்கில் டொக்டர் ஒருவர் பங்குதாரராக இருப்பதாகவும், அரசாங்கம் அவரை அச்சுறுத்தி யோஷிதவின் பெயரை உள்வாங்கியிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பலர் சுகயீனமுற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply