பொலிவூட்டின் பிரபல காதல் ஜோடியான ரன்பீன் கபூரும் கத்ரினா கைப்பும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
33 வயதான ரன்பீர் கபூரும் 32 வயதான நடிகை கத்ரினா கைப்பும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.
இதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில் இருவரும் நீண்டகாலமாக தயங்கியபோதிலும், இவர்களின் காதல் ஒரு பகிரங்க இரகசியமாகவே இருந்தது. இவ் வருடம் இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இவர்கள் இருவரும் அண்மையில் பிரிந்துவிட்டனர் என்ற தகவல் பரவியுள்ளது.
இப் பிரிவின் பின்னர் ரன்பீர் கபூர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது அரிதாகவுள்ளது. ஆனால், நடிகை கத்ரினா கைப் பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றினார்.
இதன்போது அவரை சந்திக்கும் செய்தியாளர்கள், ரன்பூர் கபூருடனான பிரிவு குறித்தும் கேள்விகளை எழுப்புகின்றனர்.
இக் கேள்விகளுக்கு பதில் கூறுவதற்கு கத்ரினா தடுமாறும் நிலையில், இது தொடர்பில் கத்ரினா கைப்புக்கு முக்கிய ஆலோசனையொன்றை கூறியுள்ளாராம் நடிகர் சல்மான் கான்.
ரன்பீர் கபூருடனான உறவு முறிவு குறித்த ஊடகங்களின் கேள்விகளை தவிர்க்காமல் இந்த உறவு குறித்து தெளிவாக கூறிவிட வேண்டும் என்பது தான் சல்மான் கானின் ஆலோசனை.
சல்மான் கானின் பிக்பொஸ் 9 நிகழ்ச்சியின் மூலம் தனது புதிய திரைப்படத்தின் புரமோஷன் நடவடிக்கைளை மேற்கொள்வதற்காக கத்ரினா கைப் வந்த போது பிரத்தியேகமாக இந்த ஆலோசனையை சல்மான் கான் கூறினாராம்.
சல்மான் கானும் கத்ரினா கைப்பும் பிரபல முன்னாள் காதல் ஜோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்ரினா கைப்பை மிகத் தீவிரமாக சல்மான் கான் காதலித்தார். ஆனால், அவரிடமிருந்து பிரிந்த கத்ரினா, ரன்பீர் கபூரை காதலிக்க ஆரம்பித்தார்.
தற்போதும் கத்ரினா கைப் மீது சல்மான் கான் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதை அவரின் நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன என பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிக் பொஸ் நிகழ்ச்சிக்கு கத்ரினா கைப் சென்றபோது, கத்ரினா, இயக்குநர் ஆதித்யா ராய் சோப்ரா, நடிகை தபு ஆகியோர் சகிதம் செல்பீ எடுத்துக்கொண்டார் சல்மான் கான். இதன்போது சல்மான், கத்ரினா நெருக்கத்தை பலர் அவதானித்தனர்.
இதேவேளை, ரன் கபூர் கத்ரினா கைப் பிரிவு விடயத்திலும் சல்மான் கானின் பெயர் அடிபடுகிறது.
பிக் பொஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கு கத்ரினா கைப் தீர்மானித்தமையே ரன்பீருக்கும் கத்ரினாவுக்கும் இடையில் பிரிவு ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கத்ரினாவும் அவரின் முன்னாள் காதலர் சல்மான் கானும் சந்திப்பதை ரன்பீர் கபூர் விரும்பவில்லையாம்.
ஆனால், இவ் விடயத்தில் ரன்பீர் கபூருக்குப் பதிலாக சல்மான் கானை கத்ரினா கைப் தெரிவுசெய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
கத்ரினா கைப் நடித்த பித்தூர் திரைப்படம் பெப்ரவரி 12 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இது பிரபல எழுத்தாளர் சார்ள்ஸ் டிக்கின்ஸன் எழுதிய “கிரேட் எக்ஸ்பெக்டேஷன்” நாவலை அடிப்படையாகக் கொண்ட கதையாகும்.