துருக்கி கடற்கரை பகுதியில் மீண்டும் அகதிச்சிறுவனின் உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று துருக்கி கடல் பகுதியில் கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவு அருகே கடலில் மூழ்கியது.இதில் குழந்தைகள் உட்பட 37 பேரின் உடல்களை கடற்படை வீரர்கள் மீட்டனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு உலகையே உலுக்கிய அய்லான் என்ற அகதிச்சிறுவனைப் போன்றே, மீண்டும் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
துருக்கி பொலிஸார், உயிரற்ற அச்சிறுவனின் உடலை தூக்கிகொண்டு போய் கடற்கரையின் ஒரு பகுதியில் வைக்கும் புகைப்படம் வெளியாகியுள்மை குறிப்பிடத்தக்கது.