இலங்கை மிக விரைவில் தனது மூன்­றா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­ற­வி­ருக்­கி­றது. 1972 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட முத­லா­வது  குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு நீண்­ட­காலம் அமுலில் இருக்­க­வில்லை.

அவ்­வ­ர­சி­ய­ல­மைப்பை திருத்தி மீண்டும் 1978ஆம் ஆண்டு ஐக்­கிய தேசிய கட்சி முன்­வைத்த இரண்­டா­வது அரசியலமைப்பு கிட்­டத்­தட்ட முப்­பது வரு­டங்­க­ளுக்கு மேல் அமுலில் இருந்­தது.

இன்றும் அவ்­வ­ர­சி­ய­ல­மைப்பே அமுலில் இருக்­கி­றது. ஆயினும் அவ்வர­சியல் அமைப்­பிற்கு கிட்­டத்­தட்ட 19 திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட்ட போதும் இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்க முடி­யாமல் போய்­விட்­டது.

தற்­போது யுத்­தத்தால் பிரச்­சி­னையை தீர்க்­கலாம் என்ற எண்ணம் மழுங்கிப் போய்­விட்­டது.

அதற்குப் பதி­லாக இனப்­பி­ரச்­சி­னையை அரசியல் ரீதி­யாக தீர்க்க வேண்­டு­மென்ற எண்ணம் வலுவடையத்தொடங்கியதால் பெரும்­பான்மை, சிறு­பான்மை மற்றும் இன மக்கள் அனை­வரும்  ஒன்­றாகச் சேர்ந்து  யுத்­தத்தால் இனப்­பிரச்சினையை தீர்க்க வேண்­டு­மென்று  கரு­தி­ய­வர்­களின் ஆட்­சியை மாற்றி சமாதான­­மான வழியில் இப்­பி­ரச்­சி­னையை தீர்க்க வேண்­டு­மென்ற ஏகோ­பித்த முடிவில் தமது வாக்­கு­ரி­மையை பாவித்து புதி­ய­தொரு அரசை நிறு­வி­யுள்­ளனர்.

இப்­பு­திய அரசு நிறு­வப்­ப­டு­வ­தற்கு எந்­த­வொரு தனி இனமோ மதமோ அல்­லது மற்றும் இலச்­ச­ணங்­களை கொண்­ட­வை­களோ தனி­யாக உரி­மை­கொண்­டாட முடி­யாது.

இலங்­கையர் சக­ல­ருக்கும் அவ்­வு­ரி­மை­யு­ரி­யது. இத­னா­லேயே இன்று இலங்­கையில் சர்­வ­கட்சி விசே­ட­மாக அர­சாங்க கட்சி, எதிர்க்­கட்சி என்று கட்­சிகள் பிள­வு­பட்டு நின்று நாட்டை ஆட்­சி­பு­ரி­யாமல் கூட்­டாக ஆட்­சி­பு­ரி­கின்­றன. உலக நாடு­களும் இதனை போற்­று­கின்­றன.

இவ்­விரு வருட காலத்­திலும் மக்கள் உணர்ந்த உண்­மை­களில் ஒன்று சக­லரும் இணைந்து நாம் இலங்­கையர் என்ற எண்­ணத்தில் வாழ்­வோ­மானால் இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்­கலாம் என்­ப­தே­யாகும்.

இதற்கு மாறான கருத்­துக்­களை கொண்­ட­வர்கள் இன்று இல்­லாமல் இல்லை. அவர்கள் தமது சுய­ந­லத்­திற்­கா­கவும் பத­விக்­கா­கவும் அத்தவ­றான கருத்தை வளர்த்து வர முயற்­சிக்­கின்­றனர்.

ஆனால் அம்­மு­யற்சி பலிக்­காமல் இருக்க வேண்­டு­மானால் புதிய அர­சி­ய­ல­மைப்பில் இனப்­பி­ரச்­சி­னைக்கு முடி­வு­கட்ட முயற்­சிக்க வேண்டும். இச்­சந்­தர்ப்­பத்தை நழு­வ­வி­டக்­கூ­டாது.

இன்று அர­சாங்­கமும் எதிர்­க்கட்­சியும் முயற்­சிப்­பது இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்க என்ன செய்­ய­வேண்டும் என்­ப­தற்­கு­ரிய அடிப்­படை கருத்தை மக்­க­ளிடம் இருந்­து­பெற்று அதன்­படி தீர்க்க வேண்டும் என்­றாகும். அதனை அர­சி­ய­ல­மைப்பு மாற்றத்தின் மூலமே செய்­ய­லாமே தவிர வேறு வழியில் செய்­ய­மு­டி­யாது என்­பது ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­வேண்டும்.

தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பு இதற்கு இடம் கொடுக்­குமா?

இன்­றைய அர­சியல் அமைப்பு மேற்­படி எண்­ணக்­க­ருவை செயல்­ப­டுத்த இடம்­கொ­டுக்­குமா? என்­பதை பார்க்க முதலில் இன்­றைய அரசியல­மைப்பு ஒன்றை உரு­வாக்க வேண்­டு­மானால் என்ன செய்ய வேண்டும் என்று கூறு­கி­றது என அறிந்து கொள்ள வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்பை திருத்­துதல் பற்றி அத்­தி­யாயம் XII இன் கீழ் உள்ள உறுப்­பு­ரைகள் பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றன.”

82 (1) அர­சி­ய­ல­மைப்பின்  ஏற்­பாட்டை திருத்­து­வ­தற்­கான  சட்ட மூலம் (bill) எதுவும்  அவ்­வாறு நீக்­கப்­ப­டு­வ­தற்­கான திருத்தப்படுவதற்கான அல்­லது சேர்க்­கப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பாடும் விளை­வாந்­தன்­மை­யி­ன­வான திருத்­தங்­களும் (Consequential Amendments) அச்­சட்ட  மூலத்தில் வெளிப்­ப­டை­யாகக்  குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தோடு  அந்த சட்­ட­மூ­ல­மா­னது அர­சி­ய­ல­மைப்பைத்  திருத்துவதற்­கான ஒரு சட்டம் என அதன் விரிவுப் பெயரில் (Long Title) விப­ரிக்­கப்­பட்டும் இருந்தால் ஒழிய பாரா­ளு­மன்ற நிகழ்ச்­சி­தாளில் (Order paper of parliament) இடம்­பெறல் ஆகாது.

82 (3) சபா­நா­ய­கரின் அபிப்­பி­ரா­யப்­படி ஒரு சட்­ட­மூலம் மேற்­படி உறுப்­புரை (1) பந்­தியின் தேவைப்­பா­டு­க­ளுக்கு இணங்க அமையும் வண்ணம் திருத்­தப்­பட்­டா­லொ­ழிய அச்­சட்­ட ­மூலம் தொடர்பில் எச் செயலும் செய்ய வேண்டாம் எனப்­ப­ணித்தல் வேண்டும்.

82 (5) அர­சி­ய­ல­மைப்பின் ஏதேனும்   ஏற்­பாட்டைத் திருத்­து­வ­தற்­கான அல்­லது அர­சி­ய­ல­மைப்பை நீக்­கு­வ­தற்கும் மாற்­றீடு செய்வதற்குமான ஒரு சட்­ட­மூலம் அதற்குச் சாத­க­மாக அளிக்­கப்­படும் வாக்­கு­களின் எண்­ணிக்கை (பாரா­ளு­மன்ற) உறுப்­பி­னர்­களின் மொத்த எண்­ணிக்­கையில் (சமுக­ம­ளிக்­காதோர் உட்­பட) மூன்றில் இரண்­டுக்கு குறை­யாததாக இருப்பதுடன் 80ஆம் 79ஆம் பிரி­வு­களின் கீழ் கூறப்­பட்­டுள்ள ஏற்­பா­டு­க­ளுக்கு இணங்க ஜனா­தி­ப­தியின் அல்­லது சபா­நா­ய­கரின் சான்­றுரை (Endorsed) அதன் மீது எழு­தப்­பட்டும் இருந்தால் சட்­ட­மாக வருதல் வேண்டும்.

82 ஆம் உறுப்­பு­ரையின் ஏற்­பா­டு­க­ளுக்கு முர­ணாக எது எவ்­விதம் இருப்­பினும் (சில சட்­ட­மூ­லங்கள் மக்கள் தீர்ப்­பினால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்) அவை எவை­யென்றால். (அ)

1. இலங்கை சுதந்­தி­ரமும் இறை­மையும் தன்­னா­திக்­கமும் கொண்ட ஜன­நா­யக சோச­லி­சக்­கு­டி­ய­ர­சாகும் என்­ப­தோடு இலங்கை ஜன­நா­யக சோச­லி­ச­கு­டி­ய­ரசு என அறி­யப்­ப­டு­தலும் வேண்டும்.

2 இலங்கை குடி­ய­ரசு ஒற்­றை­யாட்சி உடைய அர­சாகும்.

3. இலங்கை குடி­ய­ரசில் இறைமை மக்­க­ளுக்­கு­ரி­ய­தா­கவும் பாரா­தீ­னப்­ப­டுத்த முடி­யா­த­தா­கவும் இருக்கும். இறைமை என்­பது ஆட்சித் தத்­து­வங்கள், அடிப்­படை உரி­மைகள், வாக்­கு­ரிமை ஆகி­ய­வற்றை உள்­ள­டக்கும்.

4. இலங்கை குடி­ய­ரசின் தேசியக் கொடி (அர­சி­ய­ல­மைப்பின் இரண்டாம் அட்­ட­வ­ணையில் குறித்து வைக்­கப்­பட்­டி­ருக்கும்) சிங்கக் கொடி­யாக இருத்தல் வேண்டும்.

5. இலங்கை குடி­ய­ரசின் தேசிய கீதம் சிறி லங்கா தாயே என்­ப­தாக இருத்தல் வேண்டும்.

6. இலங்கை குடி­ய­ரசின் தேசிய தினம் பெப்­ர­வரி நான்காம் நாளாக இருத்தல் வேண்டும்.

7. இலங்கை குடி­ய­ரசில் பௌத்த மதத்­திற்கு முதன்­மைத்­தானம் வழங்­கப்­ப­டுதல் வேண்டும் என்­ப­தோடு அதற்­கி­ணங்க 10ஆம் 14(1) (2)ஆம் உறுப்­பு­ரையில் வழங்­கப்­பட்­டுள்ள உரி­மை­களை எல்லா மதங்­க­ளுக்கும் காப்­பு­றுதி செய்யும் அதே­வே­ளையில் பௌத்த சாச­னத்தைப் பாது­காத்­தலும் பேணி வளர்த்­தலும் அரசின் கட­மையாய் இருத்தல் வேண்டும்.

8. ஆள் ஒவ்­வொ­ரு­வரும் தான் விரும்பும் மதத்தை அல்­லது நம்­பிக்­கையை உடை­ய­வராய் இருத்­தற்­கான அல்­லது மேற்­கொள்­ளு­வ­தற்­கான சுதந்­தி­ர­முட்­பட சிந்­தனை செய்யும் சுதந்­திரம் மனச்­சாட்­சியை பின்­பற்றும் சுதந்­திரம் மத சுதந்­திரம் என்­ப­வற்­றுக்கு உரித்­து­டை­ய­வ­ரா­தலும் வேண்டும்.

9. ஆள் எவரும் சித்­தி­ரவ­தைக்கு அல்­லது கொடூ­ர­மான மனி­தா­பி­மா­ன­மற்ற அல்­லது இழி­வான நடத்­து­கைக்கு அல்­லது தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­துதல் ஆகாது.

ஆ. விட­யத்­திற்­கேற்ப ஜனா­தி­ப­தியின் பத­விக்­கா­லத்தை அல்­லது பாரா­ளு­மன்­றத்தின் ஆயுட்­கா­லத்தை ஆறு ஆண்­டு­க­ளுக்கு மேற்­பட்ட காலத்­திற்கு திருத்­து­வ­தற்­கான அல்­லது  நீக்­கு­வ­தற்­கான அல்­லது மாற்­றீடு செய்­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மா­னது அதற்கு ஆத­ர­வாக அளிக்கப்­படும் 2/3 பங்கு பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களால் நிறை­வேற்­றப்­பட்டும் மக்கள் தீர்ப்­பினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டும் ஜனா­தி­ப­தி­யினால் சான்­றுரை எழு­தப்­பட்டால் மட்­டுமே சட்­ட­மாக வருதல் வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்பின் ஏதேனும் ஏற்­பாட்டைத் திருத்­து­வ­தற்­கான அல்­லது அர­சி­ய­ல­மைப்பை நீக்­கு­வ­தற்கும் மாற்­றீடு செய்­வ­தற்­கு­மான ஒருசட்­ட­மூ­ல­மாக இல்­லாமல் அர­சி­ய­ல­மைப்பின் ஏதேனும் ஏற்­பாட்­டுடன் ஒவ்­வா­த­தாக விடுக்­கின்ற ஒரு சட்­ட­மூலம் ஒன்றை பாராளுமன்­றத்­திற்கு கொண்டு வரலாம்.

இதன்­பொருள் என்­ன­வெனில் அர­சி­ய­ல­மைப்பை நீக்­குதல், மாற்­றீடு செய்தல், அர­சி­ய­ல­மைப்பின் ஏதேனும் ஏற்­பாட்டை திருத்­துதல் இல்லாமல் தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த கரு­மங்­களை நிறை­வேற்றத் தேவை­யான சட்­ட­மூலம் ஒன்றை அமைச்­ச­ரவை விசேட பெரும்­பான்­மை­யினால் 2/3 நிறை­வேற்­றப்­பட­வேண்டும் என தீர்­மா­னித்து உயர்­நீ­தி­மன்­றமும் தீர்­மா­னிக்கும் இடத்து அதனை சட்ட மாக்­கலாம் என்­ப­தே­யாகும். தேவை­யானால் தான் ஆக்­கிய அச்­சட்­டத்தை அரசு பின்னர் நீக்­கலாம்.

மேலே கூறிய 82, 83 ஆம் உறுப்­பு­ரை­க­ளின்­படி அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் செய்­வ­தானால் 2/3 பங்கு பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களின் ஆத­ரவும் மக்கள் தீர்ப்பும் அவ­சியம் என்­பது பெறப்­ப­டு­கி­றது.

அது தவிர, அர­சி­ய­ல­மைப்­புடன் தொடர்பு இல்­லாத வேறு விசேட தேவை­க­ளுக்­காக விசேட சட்­டங்கள் இயற்ற வேண்­டு­மானால் 2/3 பங்கு பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­க­ளது ஆத­ரவு அவ­சியம் என்ற விதியும் எமது அர­சி­ய­ல­மைப்பில் உள்­ளது.

ஒரு பாரா­ளு­மன்றம் தன்னைத் தானே கட்­டுப்­ப­டுத்திக் கொள்­ள­லாமா? என்ற வினா அர­சியல் சாஸ்­தி­ரத்தில் எழு­கி­றது. அதற்கு விடை இல்லை என்­ப­தாகும்.

நடை­மு­றையில் உள்ள பாரா­ளு­மன்றம் ஒரு சட்­டத்தை இயற்றி பின்­வரும் பாரா­ளு­மன்­றங்கள் அச்­சட்­டத்­திற்கு உட்­பட்டே ஆட்­சி­பு­ரிய வேண்டும் என்று கேட்­க­மு­டி­யாது. அதேபோல் முன்­னைய பாரா­ளு­மன்­றத்தின் கட்­டுப்­பாட்­டுக்கும் அவை இயங்க தேவை­யில்லை. ஆயினும் எந்த பாரா­ளு­மன்­றமும் நடை­மு­றையில் உள்ள அர­சி­ய­ல­மைப்பு விதி­க­ளுக்கு மாறாக சட்­டங்­களை இயற்ற முடி­யாது.

மேற்­படி பண்­பு­களே 82,83, 84 ஆம் பிரி­வு­களில் காணப்­ப­டு­கி­றது. 2/3 பங்கு பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களின் ஆத­ரவும் மக்கள் ஆத­ரவும் இருக்­கு­மாயின் அர­சி­ய­ல­மைப்பு விதி­களை மட்­டு­மல்ல அர­சி­ய­ல­மைப்­பையே மாற்­ற­மு­டியும்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சந்­தி­ரிகா பண்­டாரநாயக்கவின் காலத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அர­சியல் அமைப்பில் காணப்­பட்ட சில முன்னேற்­ற­மான அம்­சங்கள்

I. அர­சி­ய­ல­மைப்பு பேரவை

பின்­வரும் உறுப்­பி­னர்­களைக் கொண்­டி­ருக்க வேண்­டிய அர­சி­ய­ல­மைப்பு பேரவை இருத்தல் வேண்டும்.

1. இரண்டு உப­ ஜ­னா­தி­ப­திகள்

2. பிர­தம அமைச்சர்

3. பாரா­ளு­மன்ற எதிர்க்­கட்சித் தலைவர்

4. பாரா­ளு­மன்ற அவைத் தலைவர்

5. அர­சி­ய­ல­மைப்­புசார் அமைச்சர்

6. முத­ல­மைச்­சர்கள் கூட்­ட­வையின் தவி­சாளர்

7. உயர் நீதி­மன்­றத்தின் அல்­லது மேன்­முறை­யீட்டு நீதி­மன்­றத்தின் ஓய்­வு­பெற்ற இரு நீதி­ப­திகள். இவர்கள் பிர­தம நீதி­ய­ர­சரின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­ப­டுவர்.

அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் தவி­சாளர் பதவி இரண்டு உப ஜனா­தி­ப­தி­க­ளி­னாலும் உப ஜனா­தி­பதி ஒவ்­வொ­ரு­வரும் தவி­சா­ள­ராக ஒரு தட­வையில் ஆறு மாதங்­களைக் கொண்­ட­தொரு காலப் பகு­திக்கு பதவி வகிக்க வேண்­டிய வகையில் சுழற்சி முறையில் வகிக்­கப்­படுதல் வேண்டும் என்றும் கூறப்­பட்டு இருந்­தது.

இரண்டு உப ஜனா­தி­ப­திகள் ஏன் என்ற கருத்து  இரண்டு உப ஜனா­தி­பதி என்ற கருத்து ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சிக்­கா­ல­மான ஜே.ஆர். காலத்­திலும் எழுந்­தது. சிறு­பான்­மை­யி­ன­ருக்கும் ஆட்சித் துறையில் பங்­க­ளிக்க வேண்டும் என்ற எண்­ணத்தால் அது எழுந்­தது.

இது சம்­பந்­த­மாக அர­சியல் ரீதி­யாக ஆலோ­சிக்­கப்­பட்­டது. காலஞ்­சென்ற நீதி­ய­மைச்சர் கே.டபிள்யூ. தேவ­நா­யகமும் காலஞ்­சென்ற வெளி­நாட்டு அமைச்­ச­ரான ஏ.சி.எஸ். ஹமீட் டும் இப்­ப­த­விக்கு நிய­மிக்­கப்­பட வேண்டும் என்று பலர் விரும்­பினர். ஆனால் பின்னர் இப்பதவிகள் சிருஷ்­டிக்­கப்­ப­ட­வில்லை.

இக்­க­ருத்து சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க காலத்­திலும் இருந்­தது என்­பது அவ­ரது அர­சி­ய­ல­மைப்பு திட்­டத்தில் அப்­ப­த­விகள் குறிக்­கப்­பட்­டது எனலாம். உண்­மையில் இரு சிறு­பான்மை இனத்­த­வ­ருக்கும் ஆட்சித் துறையில் பங்­க­ளிப்­பது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் அது கைவிடப்பட்­டது.

II. பிராந்­திய சபை­களை ஸ்தாபித்தல்

இலங்கை பின்­வரும் பிராந்­தி­யங்­க­ளாக பிரிக்­கப்­படல் வேண்டும் என ஆலோ­சனை முன்­வைக்­கப்­பட்­டது.

தலை­ந­க­ர­மான கொழும்பு ஆள்­புலம் மேற்குப் பிராந்­தி­யத்தின் பாக­மாக அமையும்.

இப்­பி­ராந்­திய சபைகள் ஸ்தாபிக்­கப்­பட்­டதன் பின்னர் அப்­பி­ராந்­தி­யங்­க­ளுக்கு தத்­து­வங்­களை மத்­தி­ய­ அரசு பகிர்ந்தளிக்­கும் என கூறப்பட்டது.

மேற்­படி ஸ்ரீல. சுந்­திரக் கட்­சியின் அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்தம், பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. நிறை­வேற்றப்பட்டிருப்பின் இனப்­பி­ரச்­சி­னைக்கு அது ஒரு விடி­வெள்­ளி­யாக இருந்­தி­ருக்கும்.

புதி­தாக நிறை­வேற்­றப்­ப­ட­வி­ருக்கும் அர­சி­ய­ல­மைப்பில் இலங்கை மாநி­லங்­க­ளாக, பிராந்­தி­யங்­க­ளாக, மாகா­ணங்­க­ளாக பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­படும் என்­ப­தற்கு முன்­னோ­டி­யாக வட மாகாண சபை தனது ஆலோ­ச­னையை முன்­வைத்துள்ளது.

அது தொடர்­பாக எதிர்ப்­புக்கள் கட்­டாயம் எழும். ஆயினும் இவற்றைப் பேசித்­தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தற்­போ­தைய அரசும் எதிர்க்­கட்­சி­களும் முயற்சி எடுத்து வரு­வது பாராட்­டத்­தக்­கது.

அர­சுக்கு 2/3 பங்கு பாரா­ளு­மன்ற ஆத­ரவு கிடைக்கும். மக்கள் தீர்ப்பும் சாத­க­மாக கிடைக்கும் என்­பது உண்­மை­யென்­றாலும் எதிராளிகளையும் அவர்­க­ளது கருத்­துக்­க­ளையும் உள்­வாங்கி சக­லரும் ஏகோ­பித்த வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்டும் என்­பதை மறக்கக் கூடாது. இதற்­கான அடித்­தளம் 2016 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இடப்­பட்­டது.

பாரா­ளு­மன்­ற­மா­னது அர­சியல் நிர்­ணய சபை­யா­கவும் மாற ஏக­ம­ன­தாக உடன்­பட்­டதே அது­வாகும். இந்­நி­கழ்வில் சபா­நா­யகர் கரு ஜயசூரிய ஆற்­றிய உரை முக்­கி­ய­மா­னது. அவ்­வு­ரையில் அவர் கூறி­ய­தா­வது :

“பாரா­ளு­மன்­றத்தால் ஆலோ­சிக்­கப்­ப­ட­விருக்கும் அர­சியல் அமைப்பு சம்­பந்­த­மான வரைவை ஆக்­கு­வ­தற்கு சகல பாரா­ளு­மன்ற அங்கத்தவர்­களும் ஏக­ம­ன­தாக ஒரு­மித்து அர­சியல் நிர்­ணய சபை­யாக தமது கட­மையில் ஈடு­பட முன்­வந்­தி­ருப்­பது பாராட்­டத்­தக்­கது.

மக்­களின் விருப்பை நிறை­வேற்ற சகல மக்­க­ளி­னதும் பிர­தி­நி­தி­க­ளி­னதும் ஒத்­து­ழைப்பும் கிடைக்கும் என நான் நினைப்­பதில் மகிழ்ச்சி அடை­கிறேன்” என்றார்.

எல்­லோரும் இவ்­வு­ரையை வர­வேற்­றனர். ஆகவே ஆரம்பம் சுமு­கமாய் இருந்­ததால் முடிவும் சுமுக­மாக இருக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்­திப்­போ­மாக.

இலங்கை ஒரு ஜன­நா­யக குடி­ய­ரசு நாடாகும். ஆகவே, சக­லரும் தமது கருத்தை முன்­வைக்க உரி­மை­யு­டை­ய­வர்கள். அவர்கள் தமது கருத்­துக்­கு­மா­றாக கருத்தை வைக்­கி­றார்கள் என்று காழ்ப்­பு­ணர்ச்­சியில் தவிர்ப்­பதோ குறை­கூ­று­வதோ கூடாது.

எல்­லோரும் ஒத்­து­ழைத்து எல்­லோ­ராலும் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய அர­சியல் அமைப்பை உரு­வாக்க முனைய வேண்டும். இன்­றைய சூழல் தவறின் மீண்டும் ஒரு யுகம் ஏற்­படும் என நினைத்து பார்க்­கவும் முடி­யாது.

ஆகவே பொறு­மை­யுடன் மக்­களும் அர­சியல் கட்­சி­களும் பொது­நலன் விரும்­பி­களும் தமது கருத்தை தெரி­விக்க வேண்டும். மாற்றான் தோட்­டத்து மல்­லிகை என்றால் அது மணக்­காது என்று கூறக் கூடாது.

இன்று என்ன செய்ய வேண்டும்?

இன்று இலங்­கையில் நில­வு­கின்ற நல்­லாட்­சியும் சக வாழ்வும் தொடர்ந்தும் நிலவ வேண்­டு­மானால் சிங்­கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் ஆகியோர் தங்கள் முழு மன­துடன் இந்­நாடு எமது நாடு என்ற எண்­ணத்தை கொள்ள வேண்டும்.

சகல இன மக்­களும் தங்­க­ளது பிர­தேசத் தலை­வர்­க­ளுடன் இணைந்து தமது பகு­திக்கு தலை­மைத்­துவம் வழங்க இடம் கொடுக்க வேண்டும். அர­சியல் அமைப்பில் இக் கருத்து உள்­வாங்­கப்­பட வேண்டும். இதன் மூலம் சமஷ்டி முறை ஒன்று உரு­வாகும் என சிலர் கரு­து­வ­துண்டு. இது தவ­றாகும்.

இலங்­கையில் இனங்­க­ளுக்கு இடையே ஒரு பிழை­யான கருத்து நில­வு­கி­றது. நாங்கள் அல்­லது எங்­க­ளது இனம் ஒரு காலத்தில் அழிந்து போக நேரிடும் என்­ப­துவே அது ஆகும். இதன் கார­ண­மா­கவே பெரும்­பான்மை மக்கள் அதி­கா­ரத்தை பகிர்ந்­த­ளிக்க மறுக்­கி­றார்கள்.

இதனை அரசு பிழை­யென காட்ட வேண்டும். தற்­போ­தைய அரசு ஓர­ளவு இதனை செய்து வரு­கின்­றது. அதற்கு அமைய அர­சி­ய­லிலும் செய்­யப்­பட வேண்டும்.

மாகாண சபை­களை அமைக்க வேண்­டு­மென்ற தீர்­மா­னத்தை இலங்கை இந்­தி­யா­வுடன் இணைந்து எடுத்­த­போது இனப்­பி­ரச்­சி­னைக்கு அது முடிவு கட்டும் என நினைத்­தது.

ஆயின் அப்­பி­ரச்­சி­னை­யுள்ள வடக்கு, கிழக்கு மட்­டு­மல்ல நாட்டின் எல்லாப் பகு­திக்கும் மாகாண சபையை அமைக்க அரசு நட­வ­டிக்­கையை எடுத்­தது.

ஏனெனில் வட, கிழக்கு மாகா­ணங்­களை தவிர்ந்த ஏனைய மாகா­ணங்­களின் அர­சியல் நிலையை கருத்தில் கொண்டே அத்­த­கைய தீர்மானம் எடுக்­கப்­பட்­டது எனலாம்.

இதனால் மருந்து கட்ட வேண்­டிய இடம் ஒன்று இருக்க உடல் முழு­வதும் மருந்தை கட்­டு­வது போல் அரசு மாகாண சபை இலங்கை முழுவ­தற்கும் கொண்டு வந்­தது. இவ்­வி­ட­யத்­தி­லேயே பிழை நடந்­தது.

இனப்­பி­ரச்­சினை வடக்கு, கிழக்கில் இருக்க அதனை தீர்க்க இலங்கை முழு­வ­தற்கும் மாகாண சபையை கொண்டு வந்­தது. இதனால் இனப்­பி­ரச்­சி­னையின் தன்­மையை உண­ராமல் அரசு செயல்­பட்­டது எனலாம்.

ஆகவே புதிய அர­சி­ய­ல­மைப்பில் இப்­பி­ரச்­சி­னையை தனி­யான பகு­திக்­கான விசேட பிரச்­சி­னை­யாக கருதி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். வட கிழக்கு தனி­யான பிரச்­சி­னையை கொண்ட பகுதி என்­பது ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும்.

காணி மற்றும் பொலிஸ் உட்­பட பல அதி­கா­ரங்கள் வட கிழக்கு பகு­தி­க­ளுக்கு அமையப் போகிற நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்க வேண்டும். மற்­றைய பகு­தி­க­ளுக்கு வழங்­கு­கின்ற அதி­கா­ரத்­திற்கு சம­மா­கவே வட, கிழக்­குக்கும் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும் என்று கருதக் கூடாது.

யுத்தம் முடிந்து பல வரு­டங்­க­ளா­கியும் இன்னும் வட கிழக்கில் சில இடங்­களில் சட்­டத்தின் மகி­மை­யையும் சமா­தா­னத்தின் பல­னையும் மக்கள் அனு­ப­விக்க முடி­யாமல் இருக்­கி­றார்கள் என்­பதை அப்­ப­கு­தியை நேரில் பார்ப்­ப­வர்கள் அறிவர். இதற்கு தேவை என்­ன­வென்றால் சட்­டமும் ஒழுங்கும் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­ப­டாமல் இருப்­ப­தாகும். ஆகவே இத­னையும் அரசு ஆலோ­ச­னைக்கு எடுக்க வேண்டும்.

தொகுப்­புரை

இலங்­கைக்கு மீண்டும் ஒரு அர­சி­ய­ல­மைப்பு அவ­சியம் என்­பதை சக­லரும் ஏற்றுக் கொள்­கின்றனர். அவ­ச­ரத்­திலும் அர­சியல் கட்­சி­களின் கொள்­கை­யிலும் திளைத்­தி­ருக்கும் கட்­சிகள் தம் இஷ்டம்போல் அரசியலமைப்பை ஆக்கியதே அவை பிழைபடுவதற்கு காரணமாயிருந்தது.

1972ஆம் ஆண்டு முக்கூட்டு அரசாங்கம் தனது சமத்துவ கொள்கையின் அடிப்படையில் சில நல்ல உறுப்புரைகள் அடங்கிய அரசியல் அமைப்பை உருவாக்கிய போதும் இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முறையில் அரசியல் அமைப்பை உருவாக்கவில்லை. இதனால் சில குறுகிய காலமே அவ் அரசியலமைப்பு உயிர் வாழ்ந்தது.

1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு மக்கள் மத்தியில் இருந்து அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் ஆலோசனைகளையும் கருத்தையும் பெறாமல் புத்திஜீவிகள் என அழைக்கப்பட்ட அரசியல்வாதிகளையும் சட்டத் தரணிகளையும் உள்ளடக்கிய குழு தயாரித்த அரசியல் அமைப்பையே அறிமுகப்படுத்தியது.

1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பை விட இது பல வழிகளிலும் முன்னேற்றம் உள்ளதாக இருந்தபோதும் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கவில்லை.

அத்துடன் சர்வாதிகார ஆட்சிக்கும் வழி வகுக்கக் கூடியதாயமைந்தது. சர்வாதிகார ஆட்சியிலேயே அவ் அரசியல் அமைப்பின் நன்மைகளை காணலாம் என்ற கருத்து ஒன்றும் உள்ளது. மக்களின் வாக்குரிமையையே புறக்கணித்து பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தையே அரசியல் அமைப்பு நீட்டியது.

அத்துடன் 19 திருத்தங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. மேலே கூறிய அரசியலமைப்புகளில் உள்ள குறைகள் மீண்டும் ஏற்பட இடம் கொடுக்கக் கூடாது.

இன்று அமையப் போகும் அரசியல் அமைப்பு அவ்வாறு  அமையாமல் நாட்டின் முக்கிய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என மக்களது அபிப்பிராயத்தை அறிந்தும் சகல துறையினரின் அபிப்பிராயத்தை கேட்டும் பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றியும் வழிகாட்டல் குழுக்களையும் அமைத்து ஓர் அரசியல் அமைப்பு வரைபை உண்டாக்க போவதால் முன்னைய அரசியல் அமைப்புக்களை விட முன்னேற்றமுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆயின் அரசியல் களத்தில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் அரசில் இணையாமல் வெளி­­யிலிருப்பதாலும் அரசில் அனுபவ­மில்லாதவர்களே முன்னணியில் இருப்பதாலும் இனப்பிரச்சினைக்கு தேவையான அரசியல் அமைப்பொன்றை உருவாக்க முடியுமா என்பதே எல்லோர் மனசிலும் எழும் கேள்வியாகும்.

பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Share.
Leave A Reply