வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மூன்று பேரை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் மாகாண சபைகளை இணைக்க வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட சமஷ்டி யோசணைக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மே 12, 13 மற்றும் 17 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த அறிவித்தலில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாண சபை, தலைவர் ஊ.ஏ.மு. சிவஞானம் மற்றும் மாகாண சபை செயலாளர் எஸ் பத்மநாதன் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.
வட மாகாணசபையின் அரசியலமைப்பு யோசனையின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்தி, மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமளிக்க வாய்ப்பு அளிக்க இடமிருப்பதாக குற்றம்சுமத்தி, அமைப்பொன்றினால் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.