சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு , சூரி நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்தின் பூஜை. இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி. விழாவில் பல திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, அங்கு வடிவேலு பேசியதுதான் ஹைலைட். அது பற்றி தெரிந்துகொள்ளுமுன்,

படம் பற்றி இயக்குநர் சுராஜ் என்ன சொல்கிறார்? ’’

‘திமிர்’ படத்துக்கு அப்புறம் விஷால், வடிவேலு சேர்ந்து நடிக்கிறாங்க. படம் முழுக்க காமெடி கேரண்ட்டி. ’தலைநகரம்’ படத்துக்கு அப்புறம் வடிவேலு அண்ணன் கூட நான் சேர்ந்திருக்கேன்.

படத்துல கத்தி சண்டை இருக்கு. அதான் கமர்ஷியலா ஒரு தலைப்பு வைக்கலாம்னு இப்படி பேர் வைச்சோம்!’’ விஷாலுக்கும் படத்தின் ஹைலைட் என்னவென்று தெரிந்திருக்கிறது என்பதை அவருடையே பேச்சே உணர்த்தியது.

’’ரொம்ப வருஷம் கழித்து வடிவேலு அண்ணன்னோட படம் பண்றேன். கண்டிப்பா படத்துல என் லுக்க விட அண்ணனோட லுக் எப்படி இருக்கும்னுதான் நீங்கள்லாம் எதிர்பார்த்துட்டு இருப்பீங்க. நிச்சயம் நம்ம எல்லாரையும் அண்ணன் அசத்திருவார்!”

IMG6583

அரங்கத்துக்குள் வடிவேலு வருகையிலேயே…

’ஹேஹேஹே…’ என உற்சாகமாக வந்தார். ‘’இன்னைக்கு சிறப்பான ஒரு நாள். படம் பேரு கத்தி சண்டை. நானும் சுராஜும் தலைநகரம்னு ஒரு படம் பண்ணோம், அடுத்து விஷாலும் நானும் திமிருன்னு ஒரு ஹிட் படம் குடுத்தோம். இப்போ நாங்க மூணு பேருமே சேர்ந்திருக்கோம். நிச்சயம் வெற்றி அடைவோம். நடிகர் சங்கத் தேர்தல்ல இருந்து எங்களுக்கு வெற்றி மேல வெற்றிதான்!’’

’’ஹீரோவாக நடிச்சுட்டு இருக்கீங்க… இப்போ திடீர்னு காமெடி கேரக்டர் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க?’’

’’இனிமே ஹீரோ மட்டும்னுலாம் இல்லை. இனி சிங்கிள் ரூமே கிடையாது, எல்லாம் டபுள் ரூம்தான். ஏப்பு…. உடனே தப்பா நினைச்சுடாதீங்க. ஹீரோ காம்பினேஷனோட நடிக்கிறதைதான் அப்படிச் சொன்னேன். படத்துல விஷால் கூடவே படம் முழுக்க வர்ற ரோல்.

’’உங்களுக்கும், சூரிக்கும் ஒரே ட்ராக் காமெடியா?’’

’’அட ஃபுல் கதையைக் கேக்காதிங்கப்பா … படத்துல பாருங்க. இதுக்கு மேல நான் பேசுனா கதையைக் கண்டுபிடிச்சிருவீங்க. அதனால நிறுத்திக்கிறேன்!’’

IMG6639

’’அப்புறம்… அரசியல்ல அமைதியாகிட்டீங்களே!’’

‘’ஆங்… நல்லா இருக்கு நியாயம் உன் சீலைல போச்சாம் சாயம்..! இங்கே என்ன பொதுக்குழுவா நடக்குது. அதெல்லாம் எதுக்கு நமக்கு. விட்ருங்க… நம்ம படம் பத்தி மட்டும் பேசுவோம்!’’ என்று அரசியல் வெடிக்கான திரியில் தண்ணீரை ஊற்றிவிட்டார்!

Share.
Leave A Reply