கட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர், ஒருவருக்கு இரத்த வடிந்தது, சிலருக்கு முகம் வீங்கியது, ஆடைகள் கலைந்தன.

முன்னாள் ஜனா­தி­ப­தியும், தற்­போ­தைய குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­ப­க் ஷவின் இரா­ணு­வ

பாது­காப்பு நீக்­கப்­பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணி­யி­ன­ர் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக்

கும் ஆளும் தரப்­புக்­கு­மி­டையே ஏற்­பட்ட வாய்த்த­ர்க்கம் திடீ­ரென கைக­லப்­பாக மாறி­யது.

இதன்­போது ஆளும்கட்சி மற்றும், மஹிந்த ஆதரவு அணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபா மண்­ட பத்தின் மத்­தியில் ஒரு­வ­ரை­யொ­ருவர் தாக்கி­ய­துடன், கட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர்.

இதனால் சபை அல்லோல கல்லோலமானது.

குறித்த கைக­லப்­பின்­போது இரண்டு தரப்பினரும் சண்­டையில் ஈடு­பட்ட உறுப்­பி­னர்­களை கட்­டுப்­ப­டுத்த முனைந்­தனர். எனினும் இரு­த­ரப்பு உறுப்­பி­னர்­களும் கும்­ப­லா­கவே மோதி­யதால் எவ­ரெவர் சண்­டையில் ஈடு­பட்டு வரு­கின்­றனர் என்­பதை அவ­தா­னிக்க முடி­யாத நிலை காணப்­பட்­டது.

கைகலப்பு நிலை­மையானது ஏனைய உறுப்­பி­னர்­க­ளினால் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்ட நிலையில் உறுப்­பி­னர்­களின் காலணிகள் சபா மண்­ட­பத்தில் காணப்­பட்­ட­தோடு, ஆடைகள் கலைந்த நிலை­யிலும் காணப்­பட்­டனர்.

அதே­நேரம் சில உறுப்­பி­னர்­களின் முகப்­ப­கு­தியில் வீக்­கங்­களும் காணப்­பட்­ட­தோடு, ஆளும் தரப்பு உறுப்­பினர் ஒருவர் இரத்தம் வடிந்­த­வாறு நின்­ற­த­னையும் அவ­தா­னிக்க முடிந்­தது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஜே.வி.பி.யின் உறுப்­பி­னர்கள் ஆச­னங்­க­ளுக்கு அருகில் நின்­றி­ருந்­த­தோடு, சிரேஷ்ட உறுப்­பி­னர்­களும் ஆச­னங்­களில் கூடி­நின்று உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் மேதலில் ஈடு­பட்ட உறுப்­பி­னர்கள் சிலர் காய­ம­டைந்­துள்ள நிலையில் ஐ.தே.க. எம்.பி.யான சஞ்­சித சம­ர­சிங்க மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார்.

பாரா­ளு­மன்றம் இன்று செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் 1.00 மணிக்கு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரியா தலை­மையில் கூடி­யது.

அதனை தொடர்ந்து சபா­நா­யகர் அறி­விப்பு மனுக்கள்  சமர்ப்­பிப்பு என்­பன நிறை­வ­டைந்த நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆத­ரவு அணியைச் சேர்ந்த தினேஷ் குண­வர்­தன எம்.பி. ஆச­னத்­தி­லி­ருந்து எழுந்து தான் ஒரு­வி­ட­யத்தை சபையின் கவ­னத்­திக்கு கொண்­டு­வர விரும்­பு­வ­தாக கூறினார்.

முன்னாள் ஜனா­தி­ப­தியும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு இரா­ணு­வத்­தினர் வழங்­கிய பாது­காப்பு நீக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை சபையின் கவ­னத்­திற்கு கொண்­டு­வர விரும்­பு­வ­தாக குறிப்­பிட்டார்.

இத் தரு­ணத்தில் வாய்­மூ­ல­மான வினாக்­க­ளுக்­கான நேரத்தில் பின்னர் குறித்த விடயம் தொடர்­பான வினா­வுக்கு இட­ம­ளிப்­ப­தாக சபா­நா­யகர் குறிப்­பிட்டார்.

அதனை ஏற்க மறுத்த தினேஷ் குண­வர்­தன, ஏற்­க­னவே இவ்­வி­ட­யத்தை சபையின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­த­தா­கவும், அதன்­போது சபையின் முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல வாக்­கு­று­தி­ய­ளித்­த­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

அத்­தோடு அவ­ருக்­கான பாது­காப்பு உடன் வழங்­கப்­ப­டு­வதை (அர­சாங்கம்) உறுதி செய்ய வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தினார்.

இதற்கு பதி­ல­ளிப்­ப­தற்கு சபையின் முதல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல ஆச­னத்­தி­லி­ருந்து எழுந்­த­போது பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்க திடீ­ரென எழுந்து குறித்த விடயம் தொடர்­பாக பதிலளிக்க முனைந்தார்.

அவ­ரு­டைய பதிலை குறு­கிய நேரத்தில் வழங்­கி­விட்டு பாது­காப்பு விடயம் என்­பதால் அது தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், அமைச்­ச­ரு­மான சரத்­பொன்­சே­கா உரிய பதிலை வழங்­குவார் எனக் கூறி அமர்ந்தார்.

அதனை தொடர்ந்து பீல்ட் மார்சல் சரத்­பொன்­சே­கா­வுக்கு பதி­ல­ளிப்­ப­தற்­கான அவ­காசம் வழங்­கப்­பட்­டது. இருப்­பினும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆத­ரவு அணி எம்.பி.க்கள் அனை­வரும் ஆச­னங்­க­ளி­லி­ருந்து எழுந்து கூடி­ நின்று கடு­மை­யான தொனியில் வச­னங்­களை வெளியிட்­டனர்.

4127-parliament-hullabaloo1627238529 இவ்­வா­றான கூச்­ச­லுக்கு மத்­தியில் அமைச்சர் சரத்­பொன்­சேகா தொடர்ந்தம் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்தார். விசே­ட­மாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தொடர்­பாக விட­ய­மொன்றை குறிப்­பிட்­ட­போது, மஹிந்த ராஜ­பக்ஷ அணியை சேர்ந்த அனைத்து  உறுப்­பி­னர்­களும் ஒன்­று­கூடி கோஷ­மிட்­ட­வாறு சபா மண்­ட­பத்தின் மத்­திற்கு வருகை தந்­தனர்.

அத்­தோடு நின்­று­வி­டாது சபா­நா­ய­கரை பார்த்து கடு­மை­யான கோஷங்­க­ளையும், அவ் அணியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் எழுப்­பினர்.

இச் சம்­ப­வத்தில் ஆளும் தரப்பு உறுப்­பி­னர்கள் முன்­வ­ரி­சையில் அமர்ந்­தி­ருந்த பிர­தமர் ரணில்­விக்­கி­ரமசிங்க, சபை முதல்வர் உள்­ளிட்ட சிரேஷ்ட  உறுப்­பி­னர்கள் மற்றும் இரண்­டா­வது வரி­சையில் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்த அமைச்சர் சரத்­பொன்­சேகா ஆகி­யோரை சுற்றி வளைத்து நின்­றனர்.

இத் தரு­ணத்தில் படைக்­கல சேவி­தர்கள், சபா­நா­யகருக்கும் செங்கோலுக்கும் கடு­மை­யான பாது­காப்பை வழங்­கி­னார்கள்.

இவ்­வா­றான நிலையில் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆத­ரவு அணி­யினர் கடு­மை­யான கோஷங்­களை எழுப்­பி­ய­வாறு சபா மண்­ட­பத்தில் தொடர்ந்தும் நின்­று­கொண்­டி­ருந்­தனர். சபா­நா­யகர் ஆச­னங்­களில் அம­ரு­மாறு உத்­த­ர­விட்டார்.

எனினும் அவர்கள் ஆசனங்களில் அத­னைத்­தாண்டி கோஷம் எழுப்­பி­ய­வாறே இருந்­தனர். நேரம் சரி­யாக 1.20 மணி­யா­கும்­போது பீல்ட் மார்சல், அமைச்­ச­ரு­மான சரத்­பொன்­சே­காவின் உரையை நிறுத்­து­மாறு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய கூறி­ய­தோடு, ஒலி­வாங்­கி­யையும் செய­லி­ழக்கச் செய்­தார்.

எனினும் சரத்­பொன்­சேகா தொடர்ந்தும் உரை­யாற்றிக் கொண்­டி­ருக்­கையில் அவ­ரு­டைய உரையை தொடர்­வ­தற்­கான அனு­ம­தி­தயை வழங்­கு­மாறு பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்க, சபை முதல்வர் லக்ஷ்மன் கி­யெல்ல ஆகியோர் சைகையால் சபா­நா­யகர் கருஜயசூரியவுக்கு அறி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து பீல்ட் மார்சல் சரத்­பொன்­சேகா உரை­யாற்­று­வ­தற்­கான மேல­திக நேரம் சபாநாய­க­ரினால் வழங்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து கடு­மை­யாக விசனமடைந்த மஹிந்த ராஜ­பக்ஷ அணியைச் சேர்ந்த தினேஷ் குண­வர்­தன, மகிந்­தா­னந்த அளுத்­கமே, கெஹெலிய ரம்­புக்­வெல, பந்­துல குண­வர்­தன போன்­ற­வர்கள் சபா­நா­ய­க­ருடன் கடு­மை­யான தர்க்­கத்தில் ஈடு­பட்­டனர்.

அதன்­போது அவர்­களை ஆச­னங்­களில் சென்று அம­ரு­மாறு சபா­நா­யகர் கோரினார். எனினும் அவர்­களை அதனை நிரா­க­ரித்து தொடர்ந்தும் கோஷங்­களை எழுப்பிக் கொண்­டே­யி­ருந்­தனர்.

இந்­நி­லையில் அனைத்து உறுப்­பி­னர்­களும் அவர்­க­ளது ஆச­னங்­க­ளுக்கு சென்று அமர்ந்­தனர். இதன்போது சபையின் இன்­றைய நாள பிரதான செயற்­பாட்­டுக்கு செல்ல வேண்­டி­யுள்­ளது என சபா­நா­யகர் கடு­மை­யான தொனியில் கூறினார்.

இருப்­பினும் சபா மண்­ட­பத்தின் நடுவில் ஆளும் மற்றும் மஹிந்த தரப்பின் ஆத­ரவு உறுப்­பி­னர்கள் கடு­மை­யான தர்க்­கத்தில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­தனர்.

dd02தர்க்கம் வலு­வ­டைந்து கொண்­டி­ருக்­கையில் திடீ­ரென ஐ.தே.க.வின் களுத்­துறை மாவட்ட எம்.பி.யும், பிர­தி­ய­மைச்­ச­ரு­மான பாலித்த தேவப்­பெ­ரு­ம­வுக்கும், கம்­பஹா   மாவட்­டத்தைச் சேர்ந்த ஐ.ம.சு.வின் எம்.பி.யும், மஹிந்த ஆத­ரவு அணியின் உறுப்­பி­ன­ரு­மான பிர­சன்ன ரண­வீர ஆகி­யோ­ருக்­கி­டையில் தர்க்கம் முற்­றி­யது.

இதன்­போது பாலித்த தேவப்­பெ­ரு­மவை பிர­தி­ய­மைச்சர் சுஜி­வ­சேனசிங்க மற்றும் நலின் பண்­டார ஆகியோர் தடுத்துக் கொண்­டி­ருந்­த­போது அவர்­களை தள்­ளி­விட்டு சபைக்கு நடுவில் சென்று பிர­சன்ன ரண­வீ­ரவை மார்­பில் கை வைத்து தள்­ளினார்.

இதன்­போது பிர­சன்ன ரண­வீர ஏதோ கூறவும் அவ­ரு­டைய முகத்தில் பாலித்த தேவப்­பெ­ரும ஓங்கி குத்­தினார். இதன்­போது இரு அணி­யி­னரும்   இரு­வ­ரையும் தடுத்து நிறுத்­து­வ­தற்கு முற்­பட்டுக் கொண்­டி­ருக்­கையில், ஐ.தே.க.வின் கேகாலை மாவட்ட எம்.பி.யுமான சந்தித் ­ச­மர சிங்க சர­மா­ரி­யாக பிர­சன்ன ரண­வீர எம்.பியை தாக்­கினார்.

இத­னை­ய­டுத்து இரு­த­ரப்­பி­னரும் யாரை யார் தாக்­கு­கி­றார்கள் என்­றி­யில்­லாது பரஸ்­பர தாக்­கு­த­லையும் தடுப்­ப­தற்­கான முயற்­சி­க­ளையும் மேற்­கொண்­டனர்.

எனினும் இதற்கு மத்­தியில் பிர­சன்ன ரண­வீர, சந்தித் சம­ர­சிங்க ஆகியோர் சபைக்கு நடுவில் கட்­டிப்­பு­ரண்டு ஒரு­வ­ரை­யொ­ருவர் தாக்­கு­தலில் ஈடு­பட்­டனர்.

இதன்­போது இரு­த­ரப்பு உறுப்­பி­னர்­களும் கால்களால் பரஸ்பர தாக்­கு­தல்கள் மேற்­கொள்ள ஆரம்­பித்­தனர். இதனால் சண்­டையில் ஈடு­ப­டு­ப­வர்கள் யார் அதனை தடுக்க முயல்­ப­வர்கள் யாரென அறிய முடி­யாத நிலை­ காணப்பட்டது.

சபா மண்­ட­பத்தில் மோதல் உக்­கி­ர­மாக இடம்பெற்றுக் கொண்­டி­ருந்­த­போது பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்க, சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் உள்­ளிட்ட உறுப்­பி­னர்கள் எதிர்க்­கட்சி கொற­டாவும், ஜே.வி.பி. தலை­வ­ரு­மான அநு­ர­கு­மார திஸா­நா­யக உள்­ளிட்­ட­வர்­கள் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் அமர்ந்­தி­ருக்கும் ஆச­னத்தில் அமர்ந்­தி­ருந்­தனர்.

இரு­த­ரப்பு உறுப்­பி­னர்­களின் மோதலால் சபை யுத்த கள­மா­னது. இந்த சந்­தர்ப்­பத்தில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களால் கல­ரியில் அமர்ந்­தி­ருந்த பாட­சாலை மாண­வர்கள் பொது மக்கள் உட­ன­டி­யாக வெ ளியேற்­றப்­பட்­டனர்.

இதனையடுத்து இருதரப்பு மோதலை கட்டுப்படுத்த இருதரப்பு சிரேஷ்ட உறுப்பினர்களும் முயற்சித்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சபா மண்டபத்தில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பி.யுடன் உரையாடிக் கொணடு வேடிக்கை பார்த்தவாறிருந்தார்.

இதன்போது உதயகம்மன்பில, பந்துல குணவர்தன எம்.பி.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் ஏதோ கூறினர்.

அதன்பின் சற்றுநேரத்திற்கு பின்னர் சம்பந்தன் சபையிலிருந்து வெ ளியேறியிருந்தார். ஆளும் தரப்பு அமைச்சர்களான ரிஷாத் பதியூதின், மலிக் சமரவிக்கிரம, போன்றவர்கள் மஹிந்த ஆதரவு அணியின் உறுப்பினர்களுடன பேசி அமைதியை ஏற்படுத்த முனைந்தனர்.

15 நிமிடங்களுக்கும் மேலாக அல்லோல கல்லோலப்பட்டு காணப்பட்ட சபையை 1.35 க்கு சபாநாயர் கருஜயசூரிய சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தர். பின்னர் 1.29 க்கு பின்னராக 3.00 மணிக்கு மீண்டும் கூடிய சபை இன்று புதன்கிழமை வரை ஒத்திவைப்பதாக அறிவித்த சபாநாயகர் கடுமையான கண்டனத்தையும் வெ ளியிட்டார்.

Share.
Leave A Reply