ஆர்யா “தனிக்காட்டு ராஜா” எனும் தனது அடுத்த படத்தில் மலைவாழ் நபராக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்காக தனது உடற்கட்டையும் மிருகத்தனமாக அதிகரித்து வருகிறார் நடிகர் ஆர்யா. ஸ்மார்ட்டாக, ப்ளே பாய் போல இருந்த ஆர்யாவா இவர் என்று வாய் பிளக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாய் தோற்றமளிக்கிறார் ஆர்யா.
இதற்காக ஜிம்மே கதி என விதவிதமான, கடினமான பயிற்சிகளில் மனம் தளராமல் ஈடுப்பட்டு வருகிறார் ஆர்யா. இதுபோன்று உடற்கட்டை ஏற்ற வெறும் உடற்பயிற்சி மட்டும் போதுமா?
டயட்டும் மேற்கொள்ள வேண்டுமே. அப்படி என்ன டயட்-ஃபிட்னஸ் இருந்து ஆர்யா இப்படி அசுரத்தனமாக உருமாறியுள்ளார் என்பதை இனிக் காண்போம்….
உணவுகள்
இந்த அளவு உடற்கட்டை அதிகரிக்க ஒரு நாளுக்கு நாற்பது முட்டைகளும் (வெள்ளை முட்டை மற்றும்), இரண்டு கிலோ சிக்கனும் சாப்பிட்டு வந்திருக்கிறார் ஆர்யா. சிக்கனிலும், கொழுப்பு குறைந்த (லீன் மீட்) சிக்கனை தான் சாப்பிட்டு வந்திருக்கிறார்.
பயிற்சி
தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்ய துவங்கிவிடுவாராம் ஆர்யா. 4 – 6 தவறாமல் இரண்டு மணி நேரம், தடகள வீரர்கள் பின்பற்றும் இண்டென்ஸ் பயிற்சிகளை மேற்கொண்டு தான் இந்த உடற்கட்டை ஏற்றி இருக்கிறார் ஆர்யா.
இண்டென்ஸ் பயிற்சிகள்
இண்டென்ஸ் பயிற்சிகள் என்பாத சாதாரணமாக வெறுமென புஷ் அப்ஸ், சிட் அப்ஸ், வெயிட் தூக்குவது என அல்லாமல், ஓரிரு பயிற்சிகளை சேர்த்து ஒன்றாக செய்வது போன்றது ஆகும்.
அதாவது, ப்ளான்க் மற்றும் புஷ் அப்ஸ் சேர்த்து செய்வது, dumbbells தூக்கிக் கொண்டு ப்ளான்க் மற்றும் புஷ் அப்ஸ் செய்வது என சற்று கடினமான பயிற்சிகள் ஆகும்.
இண்டென்ஸ் பயிற்சிகள்
இவ்வாறான பயிற்சிகள் மேற்கொள்வதால் வேகமாக உடற்கட்டை ஏற்ற முடியும், மற்றும் தசை வளர்ச்சியும் வேகமாக அதிகரிக்கும். முக்கியமாக ஃபிட்னஸ் மிக உறுதியாக இருக்கும்.
பிரத்யேக பயிற்சி
இதற்காக ராஜேஷ், ஜெய் எனும் இரண்டு ஃபிட்னஸ் பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்று, உடற்பயிற்சி கோட்பாடுகளை பின்பற்றி இருக்கிறார்.
மற்றவை
இதுபோக தான் எப்போதும் செய்யும், நீச்சல், சைக்ளிங் போன்ற பயிற்சிகளிலும் ஈடுப்பட்டு வருகிறார் ஆர்யா. ஆக மொத்தத்தில், தனிக்காட்டு ராஜா படத்தில், இதற்கு முன் காணாத ஆர்யாவை ரசிகர்கள் பார்த்து ரசிக்க முடியும். ஆனால், அவருக்கே உரித்தான அந்த ப்ளேபாய் லுக் போச்சே பாஸ்!
ஆர்யா பயிற்சி செய்யும் காணொளிகள்! ஆர்யா பயிற்சி செய்யும் காணொளி…