கனடாவின் அல்பேர்டா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெரிய காட்டுத்தீயை அடுத்து, அங்கிருக்கும் நகர் ஒன்றிலிருக்கும் ஒட்டுமொத்த மக்களையும் வெளியேறுமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஃபோர்ட் மெக்மர்ரி என்ற அந்த நகரில் வசிக்கும் குறைந்தது 80 ஆயிரத்துக்கும் அதிகமானோரை வெளியேற்றும் பணிகள் நடந்துவருகின்றன.

அந்நகரின் பிரதான சாலையை தீ சூழ்ந்துகொண்டதை அடுத்து, அங்குள்ள மக்களை பதற்றமடைய வேண்டாம் என்று அதிகாரிகள் கோரியிருந்தனர்.

ஃபோர்ட் மெக்மர்ரி நகரை சூழவுள்ள பகுதிகள் அனைத்தும் தீயில் நாசமாகிவிட்டதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.

யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கனடாவின் எண்ணெய் வளப் பிரதேசத்தின் மத்தியில் தான் இந்நகரம் அமைந்துள்ளது.

Share.
Leave A Reply