கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணியின் தலைவர் விராட் கோலிக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கொல்கத்தா 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி தலைவர் விராட் கோலிக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெதுவாக பந்துவீசிய குற்றச்சாட்டில் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவது 2–வது முறையாகும். ஏற்கனவே அவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.
இதன்மூலம் அவர் இதுவரை ரூ.36 லட்சத்தை இழந்து உள்ளார்.
இதேபோல இந்த போட்டியில் வெற்றி கொண்டாட்டத்தின்போது கொல்கத்தா அணி தலைவர் காம்பீர் கதிரைகளை எட்டி உதைத்தார்.
இதற்காக அவருக்கு போட்டியில் பெறும் பணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
வரம்பு மீறிய ஹர்பஜன்… அடிக்கப் பாய்ந்த அம்பதி ராயுடு – வீடியோ
04-05-2016
ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி வீரர்களான ஹர்பஜன் சிங்கும் அம்பதி ராயுடுவும் வரம்பு மீறிய நடந்துக்கொண்டது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் புனே அணி பேட்டிங் செய்யும் போது 11-வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். அந்த ஓவரில் ஒரு பந்தை திவாரி அடிக்க, பந்து பவுண்டரியை நோக்கி சென்றது. அந்த பந்தை அம்பதி ராயுடு தடுக்க முயன்றார்.
ஆனால் அது பவுண்டரிக்கு சென்றுவிட்டது. இதனால் ஹர்பஜன் கோபப்பட்டு மிக மோசமான வார்த்தை ஒன்றால் அம்பதி ராயுடுவை திட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராயுடு, ஹர்பஜனை நோக்கி அவரை அடிப்பது போல் வேகமாக சென்றார். ஹர்பஜனும் ராயுடுவை நோக்கி செல்ல பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன் இருவரும் அடித்துக்கொள்வார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது.
ஆனால், ஏற்கனவே இது போல் ஒரு பிரச்சனையில் சிக்கிய அனுபவம் கொண்ட ஹர்பஜன், ராயுடுவை அமைதிப்படுத்தினார். ஆனால், ராயுடு தொடர்ந்து கோபமாக இருந்தார்.
பின்னர் ஹர்பஜன் ஒரு விக்கெட்டை வீழ்த்தியபோது இருவரும் சேர்ந்து அதை கொண்டாடியதன் மூலம் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.