புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களின் மரவனுப்பரிசோதனை மேற்கொள்வதற்கான பணத்தினை இதுவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் செலுத்தவில்லை.
இதனாலேயே மரவனுப்பரிசோதணை ஆய்வுகள் தாமதப்படுகின்றது என்று அவ்வாய்வினை மேற்கொண்டுவரும் ஜீன்ரெக் நிறுவனம் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
வித்தியா கொலை வழக்கின் 11, 12 ஆம் சந்தேக நபர்களுடைய வழக்கு இன்று புதன்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது கடந்த முறை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் குறித்த வழக்கின் சந்தேக நபர்கின் மரவனுப்பரிசோதணை அறிக்கை தாமதமாவதற்கான காரணத்தினை தெரியப்படுத்துமாறு அவ்வாய்வினை மேற்கொண்டுவரும் ஜீன்ரெக் நிறுவனத்திற்கு அறிவித்தல் ஒன்று நீதிமன்றத்தில் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட அறிவித்தலுக்கான பதில் ஜீன்ரெக் நிறுவனத்தினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அந்த பதிலில் மரவனுப்பரிசோதணை மேற்கொள்வதற்கான பணத்தினை இன்னும் குற்றப் புலனாய்வு பிரிவினர் செலுத்தவில்லை. இதனாலேயே ஆய்வு நடவடிக்கையில் கால தாமதம் ஏற்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மரவனுப்பரிசோதணைக்கான பணத்தினை செலுத்துமாறு உத்தரவிட்ட நீதுவான், ஆய்வு அறிக்கையினை மிக விரைவாக மன்றுக்கு சமர்ப்பிக்கமாறு குற்றப் புலனாய்வு பிரிவினருக்க உத்தரவிட்டிருந்தார்.
வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்கள் சார்பில் தமிழ் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகப் போவதில்லை
05-05-2016
வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்கள் சார்பில் தமிழ் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகப் போவதில்லை என்று ஒருமித்த முடிவினை சட்டத்தரணிகள் சமூகத்தினர் எடுத்துள்ளனர்.
சட்டத்தரணிகளினால் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவானது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் இறுதியாக கைது செய்யப்பட்ட 11,12 ஆவது சந்தேக நபர்களுடைய வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேக நபர்கள் இருவர்களிடத்திலும் உங்கள் சார்பில் சட்டத்தரணிகள் யாரையும் நியமிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த இரு சந்தேக நபர்களும் வித்தியாவின் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் என்றவுடனேயே எங்கள் சார்பில் தாங்கள் ஒரு போதும் ஆஜராகப்போவதில்லை என்று தமிழ் சட்டத்தரணிகள் சொல்லுகின்றார்கள்.
இதனால் எங்களால் சட்டத்தரணிகளை நியமிக்க முடியவில்லை என்று சந்தேக நபர்கள் இருவரும் நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.
இதன் போது மன்றில் இருந்த சட்டத்தரணிகளான இ.சபேசன், ரங்கன் ஆகிய இரு சட்டத்தரணிகளிடமும், இவ்வழக்கின் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராவதில்லை என்று தீர்மானம் எதுவும் எடுத்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த மேற்படி இரு சட்டத்தரணிகளம் நாங்கள் எங்களுடைய மனச்சாட்சியின் படி வித்தியாவின் வழங்கின் சந்தேக நபர்களுக்கான ஆஜராகப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளோம்.
பெரும்பாலும் ஏனைய சட்டத்தரணிகளும் இந்த முடிவிலேயே இருக்கின்றார்கள் என்று நீதவானிடம் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.
சட்டத்தரணிகளின் கருத்தினை செவிமடுத்த நீதவான், சந்தேக நபர்கள் சார்பில் உள்ள உண்மைகள் சிலவற்றினை தெரிவிப்பதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். எனவே இது தொடர்பாக ஆராய்ந்து முடிவ எடுங்கள் என்றும் நீதவான் சட்டத்தரணிகள் இடத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.