அயல்வீட்டுப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டிருந்த தந்தையை தாயும் மகளுமாகச் சேர்ந்து நையப்புடைத்த சம்பவம் அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அயல்வீட்டுப் பெண்ணின் கணவர் யுத்தகாலத்தில் காணாமல் போய் விட்ட பின்னர் குறித்த பெண்ணும் அவளது 11 வயதான மகனும் பெண்ணின் தாய் மற்றும் வெளிநாட்டு உறவுகளின் துணையுடன் தனியே வாழ்ந்து வந்துள்ளனர்.

இந் நிலையில் அயல்வீட்டில் இருந்த அந்தப் பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த கணவனைப் பலதடவைகள் மனைவி எச்சரித்தும் கணவர் இரகசியமாக உறவைப் பேணி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு கணவர் வீட்டை விட்டு வெளியேறிச் செல்வதை அவதானித்த மனைவி தனது மகளுடன் கணவரைப் பின்தொடர்ந்து சென்று பக்கத்து வீட்டு கிணற்றுப் பக்கமாக வைத்து கணவனையும் பக்கத்து வீட்டு பெண்ணையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் கணவனையும் பெண்ணையும் தாக்கத் தொடங்கவே அயல்வீட்டில் இருந்தவர்கள் திருடர்கள் என நினைத்து அப்பகுதிக்கு வந்துள்ளனர். அதன் பின்னரே உண்மை வெளியாகியதாகத் தெரியவருகின்றது.

மகள் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவி எனவும் மகள், மனைவியிடம் அடிவாங்கிய கணவர் சங்கக்கடையில் வேலைசெய்பவர் எனவும் தெரியவருகின்றது.

Share.
Leave A Reply