பாகிஸ்தானில் தனது தோழியின் காதலுக்கு உதவி செய்த மகளை அவரது தாயாரே உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

33DD66D200000578-3574879-image-a-28_1462456266175பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள Donga Gali நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

16 வயது பெண் ஒருவர், தனது தோழி அவரது காதலனோடு வீட்டை விட்டு ஓடிப்போவதற்கு உதவிசெய்துள்ளார்.

இதனால் கோபம் கொண்ட தாயார் தனது மகளை கௌரவ கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

article-doc-a88f9-1AyYTcHVAh4a72cd035c20d7f03e-565_634x411அதன்படியே தாயார் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவர் உட்பட 15 பேர் சேர்ந்து இளம்பெண்ணை உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர்.

இக்குற்றத்திற்காக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 15 பேரை 2 வார பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தும்படி பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படியே கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் 15 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்,

பாகிஸ்தானில் ஒவ்வொருஆண்டும் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் உறவினர்களால் கௌரவ கொலை செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply