பாஜக எம்பி சாக்ஷி மகாராஜ், பெண்கள் மற்றும் ஆண்கள் கூட்டம் சூழப்பட்ட ஒரு வீட்டில், மாணவி ஒருவரிடம் ஜீன்ஸ் பேண்டை கழட்டி காயங்களை காட்டுமாறு கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

குறித்த வீடியோவில், சாக்ஷி மகாராஜ் ஒரு கூட்டம் நிறைந்த வீட்டில் பேசி கொண்டிருக்கிறார்.

அப்போது பொலிசார் தாக்குதலில் காயமடைந்த ஒரு மாணவியிடம் ஜீன்ஸ் பேண்டை இறக்கி காயங்களை காட்டும் படி கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது குறித்த வீட்டில் பொலிஸ் நுழைய முற்பட்ட போது, சுட்டுவிடுவேன் வெளியே செல்லுங்கள் என சாக்ஷி மகாராஜ் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இவர் அமர்ந்திருந்த வீட்டில் பொலிசார் நுழைந்து அவரின் இரண்டு மகள்களிடம் தவறாக நடந்ததாக அப்பகுதி காவல் நிலையத்தில் சாக்ஷி மகாராஜ் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இங்கே என்ன நடக்கிறது? அப்பாவி பெண்களை இப்படி கொடுமைப்படுத்தலாமா??

Share.
Leave A Reply