சூர்யா நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘24’. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நித்யா மேனன் மற்றும் சமந்தா நடித்துள்ளார்கள். விக்ரம் குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது.
டைம் டிராவலை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் படத்தை பற்றி நல்ல கருத்துக்களும் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
சூர்யா தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள திரையரங்கில் படம் பார்த்திருக்கிறார். பின்னர் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்திருக்கிறார்.
இதில் ஒரு ரசிகர், அஜித்துடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு சூர்யா, ‘தல சொல்லிட்டார்னா பண்ணிடலாம்’ என்று கூறியிருக்கிறார்.
இது அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சூர்யா தரப்பில் இருந்து சிக்னல் கிடைத்துவிட்டதால், அஜித்தை சம்மதிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முயற்சி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.