ஆண்களை காதலித்து பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட ரேனுகா இரவிச்சந்திரன் என்ற யுவதி தொடர்பில் தகவல் அறிந்தோர் சுன்னாகம் பொலிஸ் நிலைய அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி சுன்னாகம், தாவடி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வந்திருந்த மேற்படி பெண் குறித்த யுவதி கொழும்பில் வசித்து வருவதாக கூறிய, சுன்னாகம்- தாவடி பகுதியில் உள்ள நபருடன் தொடர்பினை பேணி, அவருடைய வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், பகல் வேளையில் அனைவரும் உறக்கத்தில் இருந்தபோது, மயக்கமருந்து தெளித்து 8 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 25 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளார்.
இது தொடர்பில் வழக்கு பதிவு செய்த சுன்னாகம் பொலிஸார், கடந்த 2 வருடங்களாக யுவதியை தேடி வருகின்றனர்.
குறித்த யுவதியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 021-2240323 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.