கிளிநொச்சி – புளியம்பொக்கணை ஆற்றில் இறந்த நிலையில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆற்றில் சிசு ஒன்றின் சடலம் இருப்பதாக தர்மபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தடைய பொலிஸ் பிரிவு ஆகியோர் இறந்த நிலையில் இருந்த சிசுவை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சிசு ஆற்றில் வீசப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருக்கும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.