சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. புதிய தலைமுறை தொலைக்காட்சியும், ஏபிடி நிறுவனமும் இணைந்து மக்களின் நாடிக்கணிப்பு 2016 என்று மாபெரும் சர்வே ஒன்றை நடத்தியுள்ளன.
இந்த சர்வே முடிவுகள் இன்று இரவு 7 மணி முதல் வெளியாகிவருகிறது. இந்த கருத்து கணிப்புபடி, அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.

அதிமுக 164 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்கும் என்று இக்கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. திமுக 66 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மக்கள் நல கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு மொத்தமே 4 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.09-1462809035-poll-1121-600

அதிமுகவுக்கு 38.58% வாக்காளர்களும், திமுகவுக்கு 32.11% வாக்காளர்களும், தேமுதிகவுக்கு 8.55% வாக்காளர்களும், பாமகவுக்கு 4.47% வாக்காளர்களும், நாம் தமிழர் கட்சிக்கு 2.12% வாக்காளர்களும், பாஜகவுக்கு 1.96% வாக்காளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போர் பிரிந்து கிடப்பதால், அதிமுக எளிதாக வெற்றி பெறும் என்பது இந்த கணிப்பின் சாராம்சம்.
Share.
Leave A Reply