கிளிநொச்சி பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
தொலைபேசியில் உரையாடியவாறு புகையிரதத்தை கடக்க முயற்சித்த போதே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த கடுகதி புகையிரதத்துடன் மோதுண்டு இவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பரந்தன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை மூன்று பேர் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.