இந்துமதத் தலைவர்களை கொலை செய் தால், கை நிறைய பணம், தென் ஆபிரிக்காவில் தொழில் வாய்ப்பு வழங்க மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் சதித் திட்டம் தீட்டிய தகவல் அம்பலமாகி உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் திகதி குஜராத்தில் இந்து அமைப்பை சேர்ந்த பரூச் ஷிரிஷ் பன்காலி, பிரக்னேஷ் மிஸ்திரி ஆகிய 2 பேரை மும்பை தாதா தாவூத் இப்ராஹிமின் ஆட்கள் சுட்டுக் கொன்றனர்.
இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில், 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்கிலிட்டதற்கு பழிக்குப் பழியாக 2 பேரை கொலை செய்ததாக கூறியுள்ளனர்.
எனினும் தேசிய புலனாய்வு முகாமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள், கைதான தாவூத் இப்ராஹமின் ‘டி கம்பெனி’ (தாவூத்தின் திரை
மறைவு வேலைகளை குறிப்பது) ஆட்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்டி விடவும் தாவூத் சதி திட்டம் தீட்டி உள்ளதும், அந்த தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கை நிறைய பணம், தென் ஆபிரிக்காவில் வேலை தருவதாகவும் ஆசை காட்டி உள்ளனர்.
குறிப்பாக பாகிஸ்தானை சேர்ந்த ஜாவேத் சிக்னா, தென் ஆபிரிக்காவின் ஜஹித் மியான் என்கிற ஜாவோ இருவரையும் தாவூத் இப்ராஹிமின் ‘டி- கம்பெனிக்காக களமிறக்கியமை தெரியவந்துள்ளது.
இதற்காக ரூ.50 லட்சம் குஜராத்துக்கு ஹவாலா மூலம் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு துப்பாக்கியும் தரப்பட்டுள்ளது. உள்ளூர் தலைவர்கள் 15 பேரின் பெயர் பட்டியலையும் அவர்கள் தயாரித்துள்ளனர்.
அவர்களை கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டி செயற்படுத்துவதற்கு முன்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாவூத்தின் ஆட்களை கைது செய்துள்ளனர்.