நோயாளியொருவரை மேலதிக சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மருத்துவ ஊர்தி ஒன்றின் சாரதி வாகனத்தை வீதியில் நிறுத்தி விட்டு உணவருந்த சென்ற சம்பவம் ஒன்று கேகாலையில் பதிவாகியுள்ளது.

எமது ஹிரு செய்தியாளர் ஒருவரால் இது தொடர்பான காணொளி காட்சி எமக்கு கிடைத்துள்ளது.

குறித்த மருத்துவ ஊர்தியில் இருந்த பெண் நோயாளி கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ ஊர்தி கேகாலை – கலிகமுவ – பிசோவல பிரதேசத்தின் உணவகம் ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த சம்பவம் – காணொளி இணைப்பு
10-05-2016

மாத்தளை – கவுடுபெலெல்ல பிரதேசத்தில் உயிரிழந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது பாதையை வழிமறித்து கட்டப்பட்டிருந்த சுவர் ஒன்று  பிரதேசவாசிகளால் உடைத்து வீழ்த்தப்பட்டது .

சம்பவம் தொடர்பான காணொளி

 

Share.
Leave A Reply