பாதாள உலக தலைவர்களில் ஒருவரான நொச்சியாகம சரத் பண்டார என்ற எஸ்.எப் .பண்டா மற்றும் மேலும் இருவர் கடந்த 30 திகதி கொலை செய்யப்பட்டிருந்தனர்.

அது , திரப்பனை பகுதியின் காட்டுப்பகுதியில் வைத்தாகும்.

ரி.56 தன்னியக்க துப்பாக்கியின் மூலம் 15 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த கொலை தொடர்பில் காவற்துறையினரால் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

உயிரிழந்த எஸ்.எப் .பண்டா பல கொலை மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எஸ்.எப் .பண்டாவின் கொலைக்கு சில தினங்களுக்கு முன்னர் நொச்சியாகம பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பெண் ஒருவருடன் இருந்த போது அங்கு வந்த எஸ்.எப் .பண்டா உள்ளிட்ட குழுவினர் அவர்களை பயமுறுத்தி அவர்களை வீடியோ பதிவு செய்துள்ளனர்.

ஹிரு சி.ஐ.ஏ இரகசிய தகவல் பிரிவிற்கு தற்போதைய நிலையில் குறித்த காணொளி அடங்கிய குறுவட்டு கிடைத்துள்ளது.

Share.
Leave A Reply