அந்தமான் செல்லும் கப்பலில் வில்லனுடன் குளியல் போட்டு ஹீரோவையே அதிர வைத்துள்ளார் ஒரு ஹீரோயின். அது யார் என்பதை பார்ப்போம்.

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘அந்தமான்’. கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள்.

இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். கானா பாலா ஒரு பாடல் பாடி நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தில் இடம்பெறும் ”கோகோ கோகோ கோலா… நான் வந்திருக்கேன் கூலா…” என்ற பாடல் முழுக்க முழுக்க கப்பலில் படமாக்கப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர்-ன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கப்பலில் படமாக்கப்பட்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும் என்பது இப்பாடலின் தனி சிறப்பு.

நைட் எபெக்ட்டில் பல வண்ண விளக்குகளுடன், கப்பலில் கூடுதல் செட்களை அமைத்தது மட்டும் இன்றி, நடு நடுவே குதிரைகளையும் ஓட வைத்து பிரமிக்க வைத்துவிட்டார்களாம்.

ஹீரோயினை வில்லன் அந்தமானுக்கு கடத்திச் செல்லும்போது இடம்பெறும் பாடலாகும். பாடல் நடுவே ஹீரோயின் வில்லனை சோப் போட்டு குளிக்கவைப்பது போல காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு தான் ஹீரோயின் சோப் போடுவார், ஆனால், இந்த படத்தில் உல்டாவாக வில்லனுக்கு ஹீரோயின் சோப் போட்டதால், ஹீரோ ரிச்சர்ட் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.

எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையில், டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு கூல் ஜெயந்த் நடனம் அமைத்துள்ளார்.

இப்படத்தின் ஹீரோ ரிச்சர்ட் மண் ஆராய்ச்சி செய்கின்ற மாணவர். மண் வளத்தை மேம்படுத்துவதற்காக இவர் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை, இவரிடம் இருந்து வில்லன் கண்ணதாசன் கைப்பற்ற நிணைக்கிறார்.

இதனால் ஏற்படும் விளைவுகளும், அந்த கருவியை ரிச்சர்ட் வில்லனிடம் இருந்து காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் கதை.

கதை, வசனம், பாடல்கள் டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர் எழுதுகிறார். எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் இப்படத்தை இயக்குகிறார். எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையமைக்க, ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார்.

கூல் ஜெயந்த் நடனம் அமைக்க, ஜி.ஆர்.அனில் மல்நாட் எடிட்டிங் செய்கிறார். ராக் பிரபு சண்டைப்பயிற்சி அளிக்க, சுந்தர்ராஜன் கலையை நிர்மாணிக்கிறார்.

இந்த பிரம்மாண்ட பாடல் காட்சியைப் போல படத்தினையும் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் ஏ.கண்ணதாசன், அந்தமானில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தாத பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

Share.
Leave A Reply