மனைவி பலருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கொலை செய்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
நீலாங்கரை ராஜேந்திரா நகரை சேர்ந்த தம்பதி முரளி (29), ஜானகி (22). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். முரளி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஜானகிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது முரளிக்கு தெரிய வரவே, மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மனைவியின் தவறான நடத்தை காரணமாக, வீட்டை காலி செய்துவிட்டு அதே பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நகருக்கு முரளி குடிபெயர்ந்துள்ளார்.
அங்கும், ஒருவருடன் ஜானகிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவும் முரளிக்கு தெரியவர, ஜானகியை பலமுறை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஜானகி, அவரது தாய் வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து நீலாங்கரை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஜானகியின் கழுத்தில் நகக் கீறல் இருந்துள்ளது.
கழுத்தும் இறுக்கப்பட்டிருந்தது. எனவே, சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு அறிஞர் அண்ணா நகரிலுள்ள ஒரு வீட்டில் அவரது நண்பர்கள் மார்ஷல் (32), பார்த்தின் (29) ஆகியோருடன் முரளி பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
பொலிஸார் விரைந்து சென்று, முரளி உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸாரிடம் முரளி அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, ‘‘ஜானகிக்கு பலருடன் தொடர்பு இருந்தது.
அதை கைவிடும்படி பலமுறை கூறியும் கேட்கவில்லை. மனம் உடைந்த நான், நண்பர்களுடன் சேர்ந்து ஜானகியை கொலை செய்தேன்’’ என தெரிவித்துள்ளார்.
பின்னர், 3 பேரையும் பொலிஸார் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.