சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்து வருகின்றன. அந்த வகையில், அதிமுக- திமுக ஆகிய இரண்டு கட்சி விளம்பரங்களிலும் ஒரே பாட்டி நடிக்க வைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதில் நடித்த கஸ்தூரி பாட்டி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்,
அம்மா விளம்பரத்தில் நடிக்கும் போது எனக்கு தெரியும், ஆனால் குறும்படம் என்று நினைத்தேன், தேர்தலுக்கான விளம்பரம் என்று எனக்கு தெரியாது.
பிற்காலத்தில் எனக்கு என்ன நிலை வரும் என இரு கட்சிகளும் சிந்திக்கவே இல்லை.
திமுக தேர்தல் விளம்பரத்தில் நடிக்க ஒருவர் அழைத்து சென்றார், இது படத்திற்கான விளம்பரம் என்று கூறி என்னை நடிக்க சொன்னார்கள். படப்பிடிப்பு முடிந்து வரும் பொழுது என்னுடன் சேர்ந்து நடித்தவர்கள் சொல்லும் போது தான் எனக்கு தெரியும்.
இது விளம்பரம் அல்ல உங்களை பொய் சொல்லி அழைத்து வந்துள்ளனர், இது தேர்தலுக்கான திமுக கட்சி விளம்பரம் என்று கூறினர்கள்.
இதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன், எனக்கு இது எல்லாம் தேவையா?
அம்மா விளம்பரத்தில் முதலில் நடித்தேன், அம்மா விளம்பரத்தில் நடிக்க 1500 ரூபாயும், திமுக விளம்பரத்தில் நடிக்க 1000 ரூபாயும் வழங்கினர்கள்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்தால் அதுவே எனக்கு போதும் என கஸ்தூரி பாட்டி கூறியுள்ளார்.
ஆதிமுக திமுக இரண்டு கட்சி விளம்பரங்களிலும் நடித்த பாட்டி செய்தியாளர்களிடம் பேட்டி