இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர், சோதனைக் குழாய் முறையில் (ஐ.வி.எஃப்.) குழந்தை பெற்றுள்ளார்.

மெஹிந்தர்  சிங் கில் (79), தல்ஜிந்தர் கெளர் (72) தம்பதிக்கு கடந்த 46 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை.

இந்நிலையில், சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்து, 3 ஆண்டுகளுக்கு முன் அந்தத் தம்பதியர் வைத்திய நிபுனர்களிடம் சென்றுள்ளனர்.

அவர்களுக்கு சோதனைக் குழாய் முறை கருத்தரிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களது முதல் இரு முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.

எனினும் மூன்றாவது முயற்சி வெற்றி பெற்றுள்ளது. தற்போது, அந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

பெற்றோராகும் பாக்கியம் கிடைத்ததை மிகப்பெரிய செல்வமாகக் கருதும் அவர்கள், அந்தக் குழந்தைக்கு “அர்மான்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த வயதில் குழந்தைப் பெற்றெடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “மக்களிடம் பல்வேறு கனவுகள் இருந்தாலும், கடவுள் விரும்பும்போதுதான் அவை நனவாகின்றன’ என்று அவர்கள் பதிலளித்துள்ளனர்.

Share.
Leave A Reply