உயிருடன் இருக்கும் போது பல விடையங்களை நாம் புரிந்து கொள்வதில்லை ஏனோ தானோ என வாழ்துதுவிடுகின்றோம் இறந்தபின் கவலைப்பட்டு என்ன பயன் இருக்கும் போதே அன்பாகவும் பண்பாகவும் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

சசிதரன் பொன்னம்பலம் தயாரிப்பில் புவிகரன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகியிருக்கும் குறுந்திரைப்படம் “நிஜத்தின் நிழல்”. இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு, ஒளித்தொகுப்பு, மற்றும் இசையை சன் சைன் டி ஹர்ஷி மேற்கொண்டுள்ளார்.

ஈழத்தின் முண்னணிக் கலைஞர் மாணிக்கம் ஜெகன், யோகநாதன், நிரோஜினி உட்பட பலரது நடிப்பில் வெளியாகியுள்ள இத்திரைப்படம். சுயநலமாக வாழ்க்கையைக் கழிக்கும் மனிதன் மரணத்தின் பின்னரான சில நொடிகளில் தன் தவறை உணரும் காட்சி துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply