பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை பிணையில் விடுவித்து, மாத்தறை நீதவான் உரேஷா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் மூன்றில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் அவர் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

பஷில் ராஜபக்ஷ கைது

pasilமுன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற காணி கொளவனவு தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தது.

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply