சென்னை: சட்டசபைத் தேர்தலில் வென்று தி.மு.க 118 முதல் 120 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமமைக்கும் என லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
மக்கள் ஆய்வு அமைப்பு தலைவர் பேராசிரியர் ராஜநாயகம் கருத்து கணிப்பை துல்லியமாக நடத்தவதில் பெயர் பெற்றவர் . இவருடைய கணிப்புகள் எப்போதும் உண்மையாகவே இருந்திருக்கின்றன.
ராஜநாயகம் கடந்த 25 ஆண்டுகளாக கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறார். 2006ல் தி.மு.க வெற்றி பெறும் என்ற ராஜநாயகத்தின் கருத்து கணிப்பு துல்லியமாக இருந்தது.
2011ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வரும் என்ற அவரது கருத்து கணிப்பும் சரியாக இருந்தது. தற்போது தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என அவரது ஆய்வு மைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வு மைய கருத்து கணிப்பு விவரம்: திமுகவுக்கு 118 முதல் 120 இடங்கள்; அதிமுக கூட்டணி 94 முதல் 96 இடங்களில் வெல்லும் என்றும் காங்கிரஸ் 8 முதல் 10 இடங்களிலும் தேமுதிக அணி 6 முதல் 8 இடங்களில் வெல்லும் என்றும் பாமக 5 முதல் 7 இடங்களிலும் பாஜக 1 முதல் 3 இடங்களிலும் வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
தற்போதைய செயல்பாடு வேகம் அதிகரித்தால் திமுகவுக்கு 140 இடங்களும், அதிமுகவுக்கு 65 இடங்கள் கிடைக்கும் என்றும் வாக்காளர்களிடம் கடைசி நேர மாறுதல் இருந்தால் அதிமுக 115 இடங்களிலும் திமுக 105 இடங்கள் பெறும் என்கிறது கருத்து கணிப்பு.

13-1463125535-karunanidhi4511

மக்கள் ஆதரவு எவ்வளவு
தி.மு.க – காங்கிரஸ் அணிக்கு 40.7 %; அ.தி.மு.க அணிக்கு 31.8 % தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணிக்கு 10.4%; பாமகவுக்கு 5.9%; பாஜகவுக்கு 1.6% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

13-1463125591-karunanidhi-jayalalitha-12-

முதல்வர் வேட்பாளர்கள் கருணாநிதி முதல்வராவதற்கு 41.1 % பேர்; ஜெயலலிதா- 31.7 % பேர்; விஜயகாந்த்- 10.1 %; அன்புமணி ராமதாஸ்- 6 %; சீமான்- 1.9% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடைசி நேர மாறுதல்
அதே நேரத்தில் தற்போதைய செயல்பாடு வேகம் அதிகரித்தால் திமுகவுக்கு 140 இடங்களும், அதிமுகவுக்கு 65 இடங்கள் கிடைக்கும் என்றும் வாக்காளர்களிடம் கடைசி நேர மாறுதல் இருந்தால் அதிமுக 115 இடங்களிலும் திமுக 105 இடங்கள் பெறும் என்றும் இக்கருத்து கணிப்பு கூறுகிறது.

13-1463125697-karunanidhi-new-600
லயோலவின் பெயரால்

அதே நேரத்தில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்ற பெயரிலான அமைப்பு திமுகவுக்கு சாதகமாகவும் படுகுழப்பமாகவும் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply