புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணரவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒருவருடமாகின்ற நிலையில், முதலாம் ஆண்டு நினைவு தினமும் பிரார்த்தனையும் இன்று வவுனியாவில் இடம்பெற்றது.
தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்புடன் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் வவுனியா வைரவ புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்பிரார்த்தனையில் அஞ்சலி தீபம், ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
இதேவேளை ஆதிவிநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
இவ் வழிபாடுகளில் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் ஜெயந்திநாதன் குருக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.