உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவருடன் உகண்டா சென்ற கல்கிஸ்ஸ நகரபிதா தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார்.

உகண்டாவின் ஜனாதிபதியாக யொவேறி முசவேனி பதவியேற்புடன் அந்நாட்டில் பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்போதே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நகரபிதா கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர் வேறு பிரதேசமொன்றிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதவியேற்பு நிகழ்வின் போது 40 நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.1280.160.70625.0.560.350.160.300.053.800.1280.160.70625.0.560.350.160.300.053.800.1280.160.70625.0.560.350.160.300.053.800.1280.160.70625.0.560.350.160.300.053.800.1280.160.70625.0.560.350.160.300.053.800.1280.160.70625.0.560.350.160.300.053.800.1280.160.70625.0.560.350.160.300.053.800.1280.160.70625.0.560.350.160.300.053.800.1280.160.70625.0.560.350.160.300.053.800.1280.160.70625.0.560.350.160.300.053.800.1280.160.70

Share.
Leave A Reply