மழை மற்றும் மின்னல் தாக்கும் நேரத்தில் கைப்பேசி உபயோகிப்பவரா? : இந்த மாணவனின் நிலையைப் பார்த்தாவது திருந்துங்கள் (காணொளி)
இரவில் கட்டிலில் படுத்தவாறு கைத்தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த 17 வயது பாடசாலை மாணவர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமட ஒன்று கடவத்தை கோப்பியாவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வருட சாதாரண தரத்தில் சிறந்த முறையில் சித்தியடைந்து உயர்தர கல்விக்காக காத்திருந்த நிலந்த சாமிக்க குடும்பத்தின் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளையாவார்.
உயிரிழந்த மாணவனை மின்னல் தாக்கிய போது அவரது சகோதரியும் உடன் இருந்ததாகவும் இருப்பினும் அவருக்கு எவ்வித பாதிப்புகளும் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் உடனிருந்த சகோதரி தெரிவிக்கும் போது பலத்த சத்தத்துடன் இடியேற்றப்பட்டதோடு கட்டிலில் அமர்ந்திருந்த தம்பி சத்தமிட்டுக் கொண்டு தனது பக்கத்தில் வந்து அமர்ந்ததாகவும் அதன் பின்னர் அவனது உடல் கல்லை போன்று கனமாக மாறியிருந்ததுடன் சடத்தினை போல அசைவற்று அமர்ந்திருந்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் தனது சகோதரனை வைத்தியசாலைக்கு அயலவர்களின் உதவியுடன் அழைத்துச் சென்ற போதிலும் அவர் வீட்டிலேயே வைத்து உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த மின்னல் தாக்குதலால் வீட்டிலுள்ள தொலைகாட்சி சேதமடைந்திருந்ததாகவும் கட்டிலில் இருந்த மடிக்கணனிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தொலைபேசிக்கு மின்னலை ஈர்க்கும் சக்தி இல்லையெனவும் மனித உடலுக்கே மின்னலை ஈர்க்கும் சக்தி அதிகமாக காணப்படுவதாகவும் ஒருவர் தொலைபேசியில் பேசும் போது மின்னல் தாக்குதலில் உயிரிழந்தால் அது அவரது உடலை நோக்கி வந்த மின்னலாலேயே ஏற்பட்டதாக இருக்கும் எனவும் மின்னல் பற்றிய ஆராச்சிகளில் ஈடுபடும் உலகின் பிரபல வானியல் நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் வர்ணன் குரே தெரிவித்துள்ளர்.
எனினும் மின்னல் தாக்கம் அதிகமான வேளைகளில் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதனாலேயே இவ்வாறு உயிரிழப்பு ஏற்படுவதாகவும்; அவர் மேலும் தெரிவித்துள்ளார்.