எதிர்க்­கட்சி தலைவர் என்ற வகையில் சம்­பந்தன் வடக்கில் எந்தப் பகு­திக்கும் செல்­வ­தற்­கான அதி­காரம் அவ­ருக்கு உள்­ளது.

வடக்கில் இரா­ணுவ முகாம்­க­ளுக்கும் ஏனைய பகு­தி­க­ளுக்கும் அவர் சென்று பார்­வை­யிட முடியும். எதிர்க்­கட்சி தலைவர் என்ற வகையில் அவ­ருக்­கான அந்­தஸ்தும், முன்­னு­ரி­மை­யும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான வகையில் வடக்கில் எந்த செயற்­பா­டு­களும் அமை­ய­வில்லை எனவும் அர­சாங்கம் தெரி­வித்­தது.

தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ரிடம் வடக்கின் நிலை­மைகள் மற்றும் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­தனின் செயற்­பா­டுகள் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வியெழுப்பிய­போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் நாட்டில் முக்­கி­ய­மான பொறுப்பில் உள்ள ஒருவர். எதிர்க்­கட்சி தலைவர் என்ற வகையில் அவ­ருக்­கான மதிப்­பையும் அந்­தஸ்­தையும் அவ­ருக்கு வழங்­கப்­பட வேண்டும்.

அவ்­வாறு இருக்­கையில் எதிர்க்­கட்சி தலைவர் என்ற வகையில் அவர் வடக்கில் எந்தப் பகு­திக்கும் செல்­வ­தற்­கான அதி­காரம் அவ­ருக்கு உள்­ளது.

வடக்கில் இரா­ணுவ முகாம்­க­ளுக்கும் ஏனைய பகு­தி­க­ளுக்கும் அவர் சென்று பார்­வை­யிட முடியும். அதை தவ­றாக சித்­த­ரித்து அர­சியல் ரீதியில் பூதா­க­ர­மாக்க வேண்டாம்.

அதேபோல் அவர் அத்­து­மீ­றிய வகையில் இரா­ணுவ முகா­முக்குள் சென்றார் எனவும், பாது­காப்பு விதி­களை மீறி செயற்­பட்டார் எனவும் அவர்­மீது குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

எனினும் அவ்­வாறு அவர் அத்­து­மீ­றிய வகையில் உள்­நு­ழை­ய­வில்லை. அவர் பொலிஸ் பாது­காப்­புடன் தான் அங்கு சென்றார்.

முகாமில் இரா­ணு­வத்­து­டனும் அவர் சண்­டை­யி­ட­வில்லை.எனினும் ஒரு­சாரார் இந்த கார­ணத்தை வைத்­துக்­கொண்டு தவ­றான வகையில் கருத்­துக்­களை பரப்பி குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சித்­த­மையே இத்­த­னைக்கும் கார­ண­மாகும்.

வடக்கில் மட்­டு­மல்ல நாட்டில் எந்த பகு­தியில் உள்ள இரா­ணுவ முகாம்­க­ளுக்கு எதிர்க்­கட்சி தலைவர் செல்­ல­வேண்டும் என்றால் அல்லது வேறு அமைச்­சர்கள் யாரேனும் செல்­ல­வேண்டும்   என்றால் முன்­கூட்­டியே பாது­காப்பு அனு­ம­தியை பெற்றால் அது ஆரோக்கிய­மான விட­ய­மாக அமையும்.

அதேபோல் அவ்­வாறு முன்­கூட்­டியே அறி­வு­றுத்தல் விடுத்தால் நாமும் பாது­காப்பு சார் நட­வ­டிக்­கை­களை எடுக்­கவும் அவர்­க­ளுக்­கான தக­வல்­களை பெற்­றுத்­த­ரக்­கூ­டிய ஆயத்­தங்­க­ளையும் செய்­து­கொண்­டுக்க முடியும்.

இந்த விட­யங்கள் தொடர்பில் நாம் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­த­னிடம் எடுத்­து­ரைத்தோம். அவரும் எமது கார­ணங்­களை ஏற்­றுக்­கொண்டார்.

எவ்­வாறு இருப்­பினும் இப்­போது அந்த பிரச்­சி­னைகள் அனைத்தும் முடி­வுக்கு வந்­துள்­ளன. அதேபோல் வடக்கில் பாது­காப்பு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக சில கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அவையும் உண்­மைக்கு புறம்­பான கருத்­துகள் என்­பதை கூற­வேண்டும். நாம் நாட்டின் பாது­காப்பில் அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்றோம்.

மீண்டும் புலிகள் தலை­தூக்க ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம். வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலும் இனவாதம் உச்சகட்டத்தில் உள்ளது. அதற்கும் இனி இடமளிக்க முடியாது.

எவ்வாறு இருப்பினும் வடக்கிலும் தெற்கிலும் தமது அரசியல் சுயலாபங்களை கருத்தில் கொண்டு மக்களை தூண்டிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றை மக்கள் கருத்தில்கொள்ள கூடாது என்றார்.

Share.
Leave A Reply