பதவி உயர்வுக்காக கடற்படை அதிகாரிகள் தங்கள் மனைவிகளை உயர் அதிகாரிகளின் ஆசைக்கு விருந்தளிக்கும் வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை தளத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் 26 வயது மனைவி, பதவி உயர்வு பெறுவதற்காக தனது கணவர் தன்னை உயர் அதிகாரிகளின் ஆசைக்கு விருந்தளித்ததாக பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், கடற்படை அதிகாரிகள் மற்றவர்களின் மனைவிகளுடன் உறவு கொள்ளும் செயல் கடற்படையில் வழக்கமான ஒன்றாக உள்ளது.

எனது கணவரின் அனுமதியோடு பல கடற்படை அதிகாரிகள் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் வேறு ஒருவரின் மனைவியுடன் எனது கணவர் உறவு கொண்டதை நான் பார்த்தேன் என அந்த பெண் கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக கடற்படை தளபதி மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு விசாரணை குழுவை அமைக்க கேரள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply