உத்தரப்பிரதேசம்  மாநிலத்தில் உள்ள மீரட் நகரின் அருகே தந்தையின் பாலியல் கொடுமையை தாங்க முடியாமலும், இனியும் சகித்து கொள்ள முடியாமலும் அவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற இரு மகள்கள் வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தந்தையின் பாலியல் கொடுமையை தாங்க முடியாமல் சுத்தியலால் அடித்துக் கொன்ற மகள்கள் வீடியோவில் வாக்குமூலம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரின் அருகே தந்தையின் பாலியல் கொடுமையை தாங்க முடியாமலும், இனியும் சகித்து கொள்ள முடியாமலும் அவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற இரு மகள்கள் வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எனினும், இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளூர் போலீசார், இந்த வழக்கை திசைதிருப்ப முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறந்த நபர் சுவரில் தலைமோதி ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்ததாக கூறிவரும் போலீசார், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், இந்த கொலை தொடர்பாக வாக்குமூலம் அளிக்கும் பெண்களின் வீடியோவில், பிரேதத்தின் அருகாமையில் ரத்தம் தோய்ந்த சுத்தியல் காணப்படும் நிலையில் போலீசார் எதை மறைக்க இந்த நாடகம் ஆடுகின்றனர்? என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

Share.
Leave A Reply