நாய்க்கு வழங்கப்படும் சாப்பாட்டை சாப்பிட்டு கடும் பிரச்னையை சந்தித்துள்ளார் உலக மகளிர் டென்னிஸ் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ்.

இத்தாலி ஓபன் டென்னிசில் பங்கேற்பதற்காக ரோம் நகரில் உள்ள ஹோட்டலில் செரீனா தங்கியுள்ளார். அந்த ஹோட்டல் உணவக மெனுவில் நாய்களுக்கான உணவு வகைகள் என்ற பெயரில் சாப்பாடு வகைகள் இருந்தன.

தனது குட்டிநாய் ‘சிப்’க்கு அதை வாங்கி கொடுத்த செரீனா, தானும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுள்ளார். ஆனால், அதன்பிறகு, வயிற்று கலக்கல் தாங்க முடியாமல் ஒரு மணி நேரமாக டாய்லெட்டுக்கும் ரூமுக்குமாக நடந்துள்ளார்.

இதுகுறித்து செரீனா கூறுகையில், இத்தோடு என்கதை முடிந்தது என்றுதான் நினைத்தேன். நாய்கள் மட்டுமே சாப்பிட முடியும், மனிதர்கள் சாப்பிட கூடாது என்று அந்த ஹோட்டல் மெனுவில் ஒரு சப்-ஹெட்டிங் போட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றார்.

சோறு மற்றும் சால்மோன் மீன் கலக்கப்பட்ட அந்த உணவை தான் சாப்பிட்டதை செரீனா வீடியோவாகவும் எடுத்துள்ளார். இதனிடையே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்று, சக அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினா மெக்ஹலேவை தோற்கடித்து அசத்தியுள்ளார் செரீனா.

Share.
Leave A Reply