சுந்தர்.சி நடித்து தயாரித்துள்ள ‘முத்தின கத்திரிக்கா’ படம் இம்மாதம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக ‘அரண்மனை 2’ வெளியானது. பேய் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தை இயக்காமல், தன்னுடைய உதவியாளர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
‘முத்தின கத்திரிக்கா’ என்ற பெயரிடப்பட்ட இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘வெள்ளி மூங்கா’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
இதில் சுந்தர்.சிக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன் வைபவ், சதீஷ், வி.டி.வி.கணேஷ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
மேலும் இப்படம் இம்மாதம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சுந்தர்.சி. தனது அவ்னி சினிமாஸ் மூலம் தயாரித்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடவுள்ளது.
இது நம்ம ஆளுக்கு விடிவு காலம் பிறந்தாச்சு
15-05-2016
சிம்பு நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படம் பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் வெளிவந்தபாடில்லை. கடைசியாக இப்படத்திற்கு தற்போது விடிவு காலம் பிறந்திருக்கு.
சிம்பு-நயன்தாரா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. காதல் முறிவுக்கு பிறகு சிம்புவும் நயன்தாராவும் இணைந்து படம்.
சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள படம். இப்படி எண்ணற்ற சிறப்பம்சங்களை கொண்டு உருவாகியுள்ள இப்படம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டே வந்தது.
இப்படத்திற்கு பல ரீலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் வெளியாவது தள்ளிக் கொண்டே சென்றது.
இந்நிலையில், தற்போது வருகிற ஏப்ரல் 27-ந் தேதி இப்படம் வெளியாகும் என உறுதியாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு தமிழக அரசின் வரிச்சலுகையும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
மீண்டும் விவகாரமான இயக்குனருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்
15-05-2016
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தை கதை கொஞ்சம் விவகாரமானதாக இருந்தாலும் இளைஞர்களிடம் அதிகமான வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.இந்நிலையில், ஜி.வி.பிரகாஷும் – ஆதிக் ரவிச்சந்திரனும் மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்கவிருக்கிறார்கள்.
இப்படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் என்ற நிறுவனத்தின் சார்பில் ஸ்டீபன் தயாரிக்கவிருக்கிறார். தற்போது இப்படத்தின் கதாநாயகி மற்றும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டு வருகிறது.‘த்ரிஷா இல்லனா நயன்தரா’ படத்தை முடித்த கையோடு ஆதிக் தற்போது சிம்புவை வைத்து ‘AAA’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜி.வி.யும் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
எனவே, இருவரும் தங்கள் படங்களை முடித்த பிறகு இப்படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
Post Views: 34