கேன்ஸ்: பிரான்ஸின் கேன்ஸ் பட விழாவில் ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் செருப்புக் கூட போடாமல் வெறும் காலுடன் வந்தது பரபரப்பைக் கிளப்பி விட்டது.
கேன்ஸ் பட விழாவில் ஷூ அல்லது செருப்புப் போடாமல் யாரும் வரக் கூடாது என்ற சம்பிரதாயத்தை தகர்த்து பரபரப்பைக் கிளப்பி விட்டார் ஜூலியா. 48 வயதான ஜூலியா வெறும் காலுடன் ஒய்யாரமாக, கவர்ச்சித் தோற்றத்தில் நடை போட்டு வந்து அத்தனை பேரின் பார்வையிலும் விழுந்து எழுந்தார்.
டிரஸ் கோட்…
கேன்ஸ் பட விழா மிகப் பிரபலமான சர்வதேச பட விழாக்களில் ஒன்று. இங்கு டிரஸ் கோட் உள்ளது. எழுதப்படாத விதி என்றாலும் கூட பலரும் பல காலமாக இதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
கேன்ஸ் பட விழா மிகப் பிரபலமான சர்வதேச பட விழாக்களில் ஒன்று. இங்கு டிரஸ் கோட் உள்ளது. எழுதப்படாத விதி என்றாலும் கூட பலரும் பல காலமாக இதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
காலம் காலமாக…
இந்த டிரஸ் கோடின்படி யாரும் செருப்பு அல்லது ஷூ போடாமல் வரக் கூடாது என்பதாகும். இதை அனைவரும் இது காலம் வரை கடைப்பிடித்து வந்தனர். இந்த நிலையில் அதை மீறியுள்ளார் ஜூலியா.
செருப்பு மிஸ்ஸிங்…
கேன்ஸ் விழாவுக்கு வந்த அவர் கவர்ச்சிகரமான கருப்பு உடையுடன் நடை போட்டு ஒய்யாரமாக வந்தார். ஆனால் செருப்பு போடவில்லை. வெறும் காலுடன் வந்திருந்தார்.
பாராட்டு…
அதே செருப்பு இல்லாக் காலுடன் அருகில் உள்ள இடத்துக்கும் அவர் போனார். இது பலரையும் வியப்பில் விழிகளை விரிய வைத்தது. வயதையும் தாண்டிய அழகுடன், விதிகளை மீறி வெறும் காலுடன் ஜூலியா நடை போட்டதை பலரும் பாராட்டிப் பேசியுள்ளனர்.
சாதாரண ஷூக்கள்…
கடந்த வருடம் விதிமுறையை மீறி சாதாரண ஷூக்களுடன் வந்த பலரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளே அனுமதிக்காமல் வெளியேற்றினர் என்பது நினைவிருக்கலாம். இது புயலைக் கிளப்பியது. இதைக் கண்டிக்கும் வகையில்தான் ஜூலியா இப்படி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.