வட­மா­காண சபையின் வேண்­டு­கோளும் விக்­கி­னேஸ்­வ­ரனின் கோரிக்­கையும் தமிழ் மக்­க­ளுக்கு மயா­ன­பூமி வேண்டும் என்­ப­தைப் ­போன்­றதேயாகும். தமிழ்­மக்­களை ஒதுக்­கி­வைக்க அர­சாங்கம் தயா­ரில்லை.

அனை­வரும் தயா­ராக இருந்தால் ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­யுச்ச அதி­கா­ரப்­ப­கிர்வின் மூலம் எழுந்­துள்ள சிக்­கல்­க­ளுக்கு தீர்வு காணலாம் என்று வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

புலி­க­ளினால் கடத்­தப்­பட்ட தமி­ழர்­களை இரா­ணுவ முகா­முக்குள் தேடினால் கிடைக்­க­மாட்­டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே வட­மா­காண ஆளுநர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கை யில்

வட­மா­காண சபையின் வேண்டுகோளும் வட­மா­காண முதல்­வரின் கோரிக்­கையும் தமக்கு மயான பூமி­யோன்று வேண்டும் என்பதேயாகும்.

ஆனால் எமக்கு மயான பூமி வேண்டாம். நாம் சமஸ்­டியை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. சமஷ்டி என்­பது தீர்வும் அல்ல.

எனினும் ஒற்றை ஆட்சி அல்­லது சமஷ்டி ஆட்சி என்ற பிர­தான இரண்டு விதி­களின் அடிப்­ப­டையை மட்­டுமே அனை­வரும் கவ­னத்தில் கொண்டு வரு­கின்றோம்.

எனினும் இவை­த­விர மூன்­றா­வது தீர்வு ஒன்று இருக்­கவும் வாய்ப்­புள்­ளது. அந்த தீர்வு தொடர்பில் சிந்­திக்க நாம் யாரும் தயா­ராக இல்லா­ததுதான் சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எனினும் அனை­வரும் தயா­ராக இருந்தால் ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­யுச்ச அதி­கா­ரப்­ப­கிர்வின் மூலம் எழுந்­துள்ள சிக்­கல்­க­ளுக்கு தீர்வு காணலாம்.

புலி­களை நினைவு கூரும் விவகாரம்

வடக்கில் புலி­களை நினை­வு­கூரப் போவ­தாக எந்த தக­வலும் எமக்குக் கிடைக்­க­வில்லை, எனினும் இறுதி யுத்­தத்தில் உயி­ரி­ழந்த மக்களுக்கு அஞ்­சலி செலுத்த அவர்­க­ளுக்கு உரிமை உள்­ளது.

புலி­களின் பெய­ரையோ அல்­லது புலி­களின் தலை­வர்­களின் பெயர்­க­ளையோ வைத்து எதையும் மேற்­கொள்­ளாது உயிர்­நீத்த மக்­க­ளுக்கு எந்தத் தடை­களும் இன்றி அஞ்­ச­லியை செலுத்த அனு­மதி உள்­ளது.

எனினும் புலிக் கதை­களை கூறிக்­கொண்டு ஒரு­சிலர் வடக்கில் வலம் வரலாம். ஆனால் அத்தகைய செயற்பாடுகள் எல்லாம் பாது­காப்பை சீர்­கு­லைக்கும் என கருதக் கூடாது.

அவர்­களில் ஒரு­சிலர் இன்னும் பழைய நிலைப்­பாட்டில் உள்­ளனர். யுத்­தத்தை வெற்­றி­கொண்ட இரா­ணு­வத்தை ஏன் அவர்­களால் நினைவு கூர முடி­ய­வில்லை.

ஏனெனில் அவர்­களின் மனங்­களில் இன்றும் தவ­றான கருத்­துக்கள் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன. எனினும் வடக்கை பொறுத்­த­வ­ரையில் பெரும்­பா­லான தமிழ் மக்கள் தாம் அமை­தி­யா­கவும், ஒற்­று­மை­யா­கவும் வாழவே ஆசைப்­ப­டு­கின்­றனர். ஆகவே மீண்டும் புலிக் கதைகளை கூறி மக்­களை குழப்­பு­வதை நிறுத்­திக்­கொள்ள வேண்டும்.

அனை­வ­ரது கருத்­து­க­ளுக்கும் அங்­கீ­காரம்

ஜன­நா­யகம் என்­பது அனை­வ­ரது கருத்­து­க­ளுக்கும் அங்­கீ­காரம் கொடுப்­ப­தாகும். ஆகவே அவர்கள் என்ன கூறு­கின்­றனர் என்­பதை கேட்பதில் தவ­றில்லை.

ஆனால் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த அனு­ம­திக்க முடி­யாது. யுத்­தத்தின் பின்னர் வடக்கு மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய தேவைகள் பல உள்­ளன.

அவர்­களின் வாழ்வ­தாராம், பொரு­ளா­தாரா ரீதியில் அவர்­களை மேம்­ப­டுத்த வேண்­டிய தேவை, அவர்­களின் காணி­களை விடு­விக்க வேண்­டிய தேவைகள் பல உள்­ளன. அதேபோல் காணா­மல்­போன மக்­களின் நிலை­மைகள் என்­ன­வென்­பது தொடர்­பிலும் அர­சாங்கம் கண்­ட­றிய வேண்டும்

தவ­றான அபிப்­பி­ராயம்

தமிழ் மகள்­களை பொறுத்­த­வ­ரையில் அர­சாங்­கமும், இரா­ணு­வமும் மட்­டுமே தமிழ் மக்­களை கடத்­தினர் அல்­லது காணாமல் ஆக்கப்பட்­ட­மைக்கு அர­சாங்­கமே காரணம் என்ற நிலை­பாட்டில் உள்­ளனர்.

ஆனால் விடு­த­லைப்­பு­லி­களும் ஏனைய சில ஆயுதக் குழுக்கள், அங்­குள்ள அர­சி­யல்­வா­திகள் மற்றும் இந்­திய அமைத்­திப்­படை காலத்திலும் பல தமிழ் இளை­ஞர்கள் கடத்­தப்­பட்­டனர்.

அவர்­க­ளை­யெல்லாம் இரா­ணுவ முகா­முக்குள் வந்து தேடினால் அவர்கள் கிடைக்­க­மாட்­டார்கள். ஆகவே அதையும் மக்கள் விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

வெசாக் கொண்­டாட்டம்.

மேலும் வடக்கில் இம்­முறை வெகு விமர்­சை­யாக வெசாக் பண்­டிகைக் கொண்­டாட்­டங்கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. பெளத்த கொண்டாட்டமாக இருந்தாலும் தமிழ் மக்களின் பூரண ஆதரவுடனும் அனைத்து மதத் தலைவர்களின் அங்கீகாரத்துடனும் இது நடைபெற்றுகின்றது.

இந்நிகழ்வுகளில் பொதுமக்களுக்கு நிவாரணப்பணிகளை செய்வதுடன் இராணுவம், பொலிஸ் ஆகியோரின் ஆதரவுடன் அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்கு இலவச உணவு, அத்தியாவசிய பொருட்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply