குரு­ணாகல், வாரி­ய­பொல பிர­தே­சத்தில் 2 கோடி ரூபா கப்பம் கோரி வெள்ளை நிற ஹைப்ரிட் ரக காரில் வந்­தோரால் கடத்­தப்­பட்ட பிர­பல கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்­த­கரின் மகன் முஹமட் ஆஷிக் (வயது 20) நேற்று அதி­காலை நிக்க­வெரட்­டிய நகரில் கைவி­டப்­பட்ட நிலையில் மீட்­கப்­பட்­டுள் ளார்.

பொலி­ஸா­ருக்கு கிடைத்த தகவல் ஒன்­றுக்கு அமை­வாக அவரை நேற்று அதி­காலை  5.50 மணி­ய­ளவில் நிக்­க­வ­ரட்­டிய நகரின் மணிக்கூட்டு கோபு­ரத்­துக்கு அருகில் வைத்து மீட்­ட­தாக குரு­ணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் மகேஷ் சேனா­ரத்ன  தெரிவித்தார்.

குறித்த கடத்தல் மற்றும் கப்பக் குழுவைச் சேர்ந்த பிர­தான சந்­தேக நபர்கள் இரு­வரைக் கைது­செய்­துள்­ள­தை­ய­டுத்தே கடத்­தப்­பட்ட இளைஞர் நிக்­க­வ­ரட்­டியில் கைவி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் அத­னை­ய­டுத்து அவரை மீட்டு நிக்­க­வ­ரட்டி வைத்­தி­ய­சா­லையில் அனுமதித்ததாகவும் அவர் தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் நிக்­க­வ­ரட்­டியில் இருந்து குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்ட குறித்த இளைஞன் அங்கு சட்ட வைத்திய பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும், அவ­ரிடம் பெற்­றுக்­கொண்ட விஷேட வாக்கு மூலத்­துக்கு அமை­வாக மேலும் நான்கு சந்­தேக நபர்­க­ளையும் மற்­றொரு வாக­னத்­தையும் தேடி விசா­ரணை தொடர்­வ­தா­கவும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் மகேஷ் சேனா­ரத்ன தெரி­வித்தார்.

kadathalமொஹம்மட் ஆஷிக்

கடந்த வியா­ழ­னன்று இரவு 8:15 மணி­ய­ளவில் வாரி­ய­பொல நகரில் உள்ள தனது தந்­தைக்கு சொந்­த­மான வர்த்­தக நிலை­யத்தில் இருந்து இரவு உண­வினை உட்­கொள்ள மெல்­வத்த 3 ஆம் குறுக்கு வீதியில் உள்ள தனது வீடு நோக்கி மொஹம்மட் ஆஷிக் என்ற 20 வய­தான இளைஞன் தனது துவிச்­சக்­கர வண்­டியில் சென்­றுள்ளார்.

22bef361-90cb-4eba-b67b-c16c3b6f1bf3இந் நிலை­யி­லேயே வீட்­டுக்கு 200 மீற்றர் தொலைவில் 0375 என்ற இலக்­கத்தைக் கொண்ட வெள்ளை நிற ப்ராடோ ரக காரில் வந்­த­வர்கள் ஆஷிக் மீது தாக்­குதல் நடத்தி அவரை கடத்திச் சென்­றனர்.

இதன்­போது ஆசிக்கின் செருப்பு மற்றும் துவிச்­சக்­கர வண்டி ஆகி­யன வீட்டில் இருந்து 200 மீற்றர் தொலைவில் மூன்றாம் குறுக்கு வீதியில் மீட்­கப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் அடுத்த 15 நிமி­டங்­களில் ஆஷிக்கின் சகோ­த­ரனை ஆஷிக்கின் தொலை­பே­சி­யூ­டாக அழைத்த கடத்தல் குழு­வினர் அவரை விடு­விப்­ப­தற்கு 2 கோடி ரூபாவை கப்­ப­மாக கோரி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்தே விடயம் வாரி­ய­பொல பொலி­ஸாரின் கவ­னத்­துக்கு சென்றுள்­ளது.

அத­னை­ய­டுத்து வட மத்­திய, வட மேல் மாகா­ணங்­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜே குண­வர்­த­னவின் உத்­த­ர­வுக்கு அமைய குரு­ணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­னாண்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் மகேஷ் சேனாரத்ன ஆகி­யோரின் நேரடி மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சி.ஏ.பி. ஜய­சுந்­த­ரவின் ஆலோ­ச­னைக்கு அமைய வாரியபொல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிலந்த பண்­டா­ரவின் கீழான சிறப்புக் குழு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

இந்த விசா­ர­ணை­க­ளுக்­காக குரு­ணகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் மகேஷ் சேனா­ரத்ன, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சி.ஏ.பி. ஜய­சுந்­தர ஆகிய மூவரும் வியாழன் இரவு முதல் வாரி­ய­பொல பொலிஸ் நிலை­யத்தில் தங்­கி­யி­ருந்து ஆலோ­ச­னை­களை வழங்கி சந்­தேக நபர்­களைக் கைது செய்யும் திட்­டத்தை வகுத்து ஆலோ­சனை வழங்கி வந்­தமை விஷேட அம்­ச­மாகும்.

daa8ebc9-a594-4011-81ea-84df4843c938ஆஷிக்கின் தந்தை ஸரூக் ஹாஜியார் எனும் கோடீஸ்­வர வர்த்­தகர் கல்­ஹின்­னையைச் சேர்ந்­த­வ­ராவார்.

இவர் நீண்­ட­கா­ல­மா­கவே வாரி­ய­பொல நகரில் வர்த்­தகம் செய்யும் நிலையில் சில வரு­டங்­க­ளுக்கு முன்­ன­ரேயே இவ­ரது வர்த்­தக நிலையத்தை அண்­டிய மெல்­வத்த வீதியின் 3வது ஒழுங்­கையில் இவர் வீட்­டினை வாங்­கி­யி­ருந்தார்.

நகரின் மையத்­தி­லி­ருந்து சுமார் 350 மீற்றர் தொலைவில் இவ­ரது வீடு உள்­ளது. ஆஷிக் குடும்­பத்தில் நான்­கா­வது பிள்­ளை­யாவார். . இவருக்கு இரு மூத்த சகோ­த­ரி­களும் ஒரு மூத்த சகோ­த­ரனும் இளைய சகோ­த­ரனும் உள்­ளனர்.

க.பொ.த.( சா/த) வரை படித்து ஆஷிக் தந்­தைக்கு உத­வி­யாக இருக்கும் மூத்த சகோ­த­ரனின் வழியில் தானும் தந்­தையின் வியா­பார நடவடிக்­கை­க­ளி­லேயே ஈடு­பட்டு வரு­கிறார். இவர்­க­ளுடன் வர்த்­தக நிலை­யத்தில் மேலும் ஆறு ஊழி­யர்கள் பணி­பு­ரிந்­துள்ளார்..

இந் நிலை­யி­லேயே சம்­பவ தின­மன்று இரவு உணவு எடுத்து வரு­வ­தற்­காக துவிச்­சக்­கர வண்­டியில் வீட்­டுக்கு போகும் வழியில் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலை­வி­லேயே சம்­பவம் நிகழ்ந்­துள்­ளது.

இந் நிலை­யி­லேயே ஆஷிக்கின் மூத்த சகோ­த­ர­னான இஜா­ஸு­டைய தொலை­பே­சிக்கு தம்பி ஆஷிக்கின் தொலை­பே­சி­யி­லி­ருந்து அழைப்பொன்று வந்­துள்­ளது.

சிங்­கள மொழியில் கதைத்­துள்ள நபர் ஒருவர் நாம்  உமது தம்­பியை எமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கிறோம். இவரை விடு­விக்க வேண்டு­மாயின் எமக்கு இரண்டு கோடி ரூபாய் தர­வேண்டும் இல்­லை­யெனில் உங்கள் தம்­பியை எதிர்­பார்க்க வேண்டாம். என குறிப்பிட்டுள்ளார்.

இதன்­போது “எம்­மிடம் தரு­வ­தற்கு அவ்­வ­ளவு பண­மில்லை அவ்­வ­ளவு பெரிய தொகையை அச்­ச­டித்­துத்தான் தர­வேண்டும்.” என இஜாஸ் கூறி­யுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் அழைத்­துள்ள கடத்­தல்­கா­ரர்கள் “புதி­தாக வீடு கட்­டி­யுள்­ளீர்கள் புதி­தாக கடை கட்­டி­யுள்­ளீர்கள்” என்றும் அவர்­க­ளது வாக­னங்­களின் விப­ரங்கள் அசையாச் சொத்­துக்­களின் விப­ரங்கள் அனைத்­தையும் சொல்லி கப்­பத்தை கேட்­டுள்­ளனர்.

அவைகள் வங்கிக் கடன் மற்றும் உற­வி­னர்­களின் மூலம் பெற்­றவை. அந்த கடன்­களை மீள செலுத்த வேண்­டிய நிலையில் உள்­ளோம்­என கடத்தல் காரர்­க­ளுக்கு பதி­ல­ளித்­துள்ளார்.

அப்­ப­டி­யாயின் உங்­க­ளிடம் எவ்­வ­ளவு பணம் உள்­ளது?

என கேட்­டுள்­ளனர். அதற்கு இஜாஸ் இப்­போ­தைக்கு 1 ½ இலட்சம் ரூபாய் தரலாம் என குறிப்­பிட்­டுள்ளார்.

கடத்தல் காரர்கள் தொடர்ந்து தங்க நகைகள் தாரா­ள­மாக உங்­க­ளிடம் இருக்­குமே இருக்கும் பணத்­தையும் நகை­க­ளையும் எடுத்துக் கொண்டு நாம் சொல்லும் நேரத்தில் சொல்லும் இடத்­துக்கு தனி­யாக வர­வேண்டும். என கூறி தொலை­பே­சியை செய­ழி­ழக்கச் செய்துள்ளார்.

இந் நிலை­யி­லேயெ கடந்த வியா­ழ­னன்று இரவு 12 மணி­ய­ளவில் கடத்தல் கடத்­தல்­கா­ரர்கள் வாரி­ய­பொல நக­ரி­லி­ருந்து குரு­நாகல் நோக்கிய புத்­தளம் வீதியின் சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள மஹ­கெ­லிய எனும் இடத்­துக்கு வரும்­படி கூறி­யுள்­ளனர்.

அங்கு சென்ற இஜா­ஸுக்கு மீண்டும் ஹத்­அ­முன எனும் குளத்­த­ருகில் வரும்­படி கூறப்­பட்­டுள்­ளது. . அங்கு காரை திருப்பிச் சென்ற இஜாஸுக்கு மீண்டும் காரைத்­தி­ருப்பிக் கொண்டு மஹ­கெ­லிய எனும் இடத்தில் உள்ள பஸ் தரிப்­பி­டத்தில் பணத்­தையும் நகை­க­ளையும் வைத்து விட்டு போகும் படி தொலை­பே­சியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இஜாஸ் மீண்டும் காரை திருப்பிக் கொண்டு சென்று குறிப்­பிட்ட இடத்தில் பணத்­தையும் நகை­க­ளையும் வைத்து விட்டு சென்­றுள்ளார்.

சிறிது தூரம் சென்­றதும் மீண்டும் அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள கடத்தல் காரர்கள் :– திரும்பி வந்து நீங்கள் வைத்­து­விட்டுச் சென்­ற­வற்றை எடுத்துக் கொண்டு போகவும். எங்கு எப்­போது அதனை வைக்க வேண்­டு­மென்று பின்பு கூறு­கின்றோம் என குறிப்­பிட்­டுள்­ளனர்.

இந்த உரை­யா­டல்கள் அனைத்­துக்கும் ஆஷிக் உடைய தொலை­பே­சி­யையே பயன்­ப­டுத்­தி­ய­துடன் ஆஷிக் தாம் கடத்­தப்­படும் செய்­தியை சகோ­த­ர­னுக்கு சொல்­வ­தற்கும் பிற­கொரு சந்­தர்ப்­பத்தில் தம்­பி­யுடன் கதைக்க வேண்­டு­மென சொன்ன போது குடும்­பத்­தி­ன­ரோடு கதைப்­ப­தற்கும் சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந் நிலை­யி­லேயே கடத்தல் காரர்­க­ளி­ட­மி­ருந்து தொலை­பேசி அழைப்­புக்கள் பல கிடைத்­ததை அடுத்து பொலி­ஸாரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக கடத்­தப்­பட்ட இளை­ஞனின் உற­வினர் கப்பத் தொகையை 2 கோடியில் இருந்து படிப்­ப­டி­யாக குறைத்­துள்­ளனர்.

அதன்­படி இறு­தி­யாக கப்பத் தொகை­யா­னது 85 இலட்சம் ரூபாவில் முடி­வா­கி­யுள்­ளது. இத­னை­ய­டுத்து பொலி­ஸாரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக 85 இலட்சம் ரூபாவை கப்­ப­மாக செலுத்­து­வதைப் போன்று பாசாங்கு செய்­யப்­பட்டு முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இத­னி­டையே கப்பக் காரர்கள் கடத்­தப்­பட்ட இளை­ஞரின் உற­வி­னர்­களை தொடர்­பு­கொள்ளும் போது அந்த தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்­திய அறி­வியல் ரீதி­யி­லான விசா­ர­ணை­க­ளையும் சிறப்பு பொலிஸ் குழுவை ஈடு­ப­டுத்தி முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

பல­தொ­லை­பேசி உரை­யா­டல்கள் சந்­தேக நபர்­க­ளுக்கும் கடத்­தப்­பட்ட இளை­ஞரின் உற­வி­னர்­க­ளுக்கும் இடையே இடம்­பெற்­றுள்­ளன.

இறு­தி­யாக நேற்று முன்­தினம் (14) மாலை ஐந்து மணிக்கு குரு­நாகல் குளத்து வீதிக்கு வறு­மாறு அழைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அதன் பின்பும் பல இடங்­க­ளுக்கு மாற்றி அழைக்­கப்­பட்டு இறு­தி­யாக இருள் சூழ்ந்து விட்­டது. மீண்டும் நாளை பார்ப்போம் என குடும்­பத்தார் பல கார­ணங்­களை தெரி­வித்து கப்பக் காரர்­களால் அலைக்­க­ழிக்­கப்ப்ட்­டுள்­ளனர்.

இந் நிலை­யி­லேயே நேற்று முன் தினம் மாலை பொலி­ஸா­ருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் கடத்­த­லுக்கு பயன்படுத்தப்பட்ட­தாக கூறப்­படும் வெள்ளை நிற ஹைபிரிட் கார் கைப்­பற்­றப்­பட்­ட­துடன் அதன் உரி­மை­யா­ள­ரையும் பொலிஸார் கைது செய்­தனர்.

ஊரு­பொக்க பகு­தியைச் சேர்ந்த குறித்த சந்­தேக நபர் மொரட்­டுவ பல்­கலைக் கழக பொறி­யியல் பட்­ட­தாரி என்­ப­துடன் கண்­டியில் குயின்ஸ் எக­டமி என்ற பெயரில் பிரத்­தி­யோக வகுப்­புக்­களை நடாத்தும் ஆசி­ரியர் என பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

2013 ஆம் ஆண்டு மொறட்­டுவை பல்­க­லையில் பட்டம் பெற்­றி­ருந்த குறித்த சந்­தேக நபர், பிரமிட் முறை மூல­மான வர்த்­தக நடவடிக்கைகளுக்கு தேவை­யான பணத்­தினை திரட்டிக் கொள்­ளவே இந்த கப்பம் கோரும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­தாக பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து அவ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட சிறப்பு விசா­ர­ணையில் வாரி­ய­பொல பகு­தியைச் சேர்ந்த மற்­றொரு நப­ரையும் பொலிஸார் கைது செய்­தனர். அவர் முன்­னணி ஆடை தொழிற்­சா­லை­யொன்றில் மேற்­பார்­வை­யா­ள­ராக கட­மை­யாற்­றி­யவர் என பொலிஸார் தெரிவித்­தனர்.

இவர்கள் இரு­வரும் மேலும் நால்­வ­ருடன் இணைந்து இந்த கடத்­தலை முன்­னெ­டுத்­துள்­ள­துடன் அதற்­காக கைப்­பற்­றப்­பட்ட வெள்ளை நிற ப்ராடோ­வுக்கு மேல­தி­க­மாக மற்­றொரு வாக­னமும் உளவு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­ட­மையும் பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­தது.

அத்­துடன் கடத்­தப்­பட்ட ஆஷிக், மஹோ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கரந்­த­கல்ல எனும் ஊரின் பாழ­டைந்த வீடொன்றில் தடுத்து வைக்கப்­பட்­டுள்­ள­மையும் அந்த வீடாது கடத்­தலில் ஈடு­பட்ட சந்­தேக நபர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மா­னது எனவும் தெரி­ய­வந்­தது.

இத­னை­ய­டுத்து அந்த வீட்டை சுற்­றி­வ­ளைத்து அதி­ரடி நட­வ­டிக்கை ஒன்­றினை ஆரம்­பிக்க பொலிஸார் தயா­ரான போது, தமது உறுப்பினர்கள் இரு­வரின் கைதை அறிந்­து­கொண்­டுள்ள கடத்­தல்­கா­ரர்கள், கடத்­தப்­பட்ட இளைஞர் ஆஷிக்கை நிக­வெ­ர­டிய நகரை தாண்டியி­ருக்கும் மணிக்­கூட்டு கோபு­ரத்­துக்கு அருகில் கொட்டும் மழைக்கு மத்­தியில் கைவிட்­டு­விட்டு உற­வி­னர்­க­ளுக்கு அழைப்பை ஏற்படுத்தி விடுவித்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்தே நேற்று அதிகாலை ஆஷிக் பொலிஸாரால் மீட்கப்பட்டார்.

ஆஷிக் பொலிஸாரால் மீட்கப்படும் போது மிகவம் சோர்வடைந்த நிலையிலேயே இருந்துள்ளார். இவர் உடனடியாக அவர் நிக்கவரட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படார்.

பின்னர் வாரியபொல பொலிஸ் நிலையத்துக்கு ஆஷிக் அழைத்து வரப்பட்டு அவரினால் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்டு மருத்துவ அறிக்கையும் பெறப்பட்டது.

கடத்தல் காரர்களால் ஆஷிக் தக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிஸார், தனது வாய்க்குள் கடத்தல் காரர்கள் கைகளை விட்டு கன்னங்களை இரு பக்கமும் இழுத்து வதை கொடுத்ததாக வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இக்கடத்தலுடன் ஆறு சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ள நிலையில் அவர்களில் இருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஏனையோரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவர்களை கைது செய்ய சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளனர்.

Share.
Leave A Reply