உலகின் மிகப் பெரிய விமானமான யுக்ரைனின் “ஏ.என்- 225” (Antonov 225 Mriya ) விமானம் அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய நகரான பேர்த்தில் நேற்று தரையிறங்கியது.

இவ் விமானத்தை பார்ப்பதற்கு பல்லாயிரக் கணக்கானோர் திரண்டமையால் பேர்த் விமான நிலையத்துக்கு அருகே பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1988 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தினால் விண் ஓடத்தை ஏற்றிச்செல்வதற் காக தயாரிக்கப்பட்ட இவ் விமானம் 84 மீற்றர் (275 அடி, 7 அங்குலம்) நீளமானது.


இவ் விமானத்தின், இறக்கைகளின் இரு முனைகளுக்கு இடையிலான அகலம் 88.4 மீற்றர் (290 அடி) ஆகும். இவ் விமானத்தின் உயரம் 18.1 மீற்றர் (59 அடி 5 அங்கு லம்) ஆகும். 6 இயந்திரங்களை இது கொண்டுள்ளது.

உலகில் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட மிக நீளமான விமானமாகவும் அதிக பாரமான விமானமாகவும் An – 225 விளங்குகிறது. இந்த ரகத்தில் ஒரேயொரு விமானமே தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது யுக்ரைனுக்கு சொந்தமான இவ் விமானம் சரக்கு விமானமாக பயன் படுத்தப்படுகிறது. இவ் விமானத்தின் முன்புறப் பகுதிக்கூடாகவே பாரிய பொருட் கள் ஏற்றப்படுகின்றன.

117 தொன் எடையுள்ள பாரிய ஜெனரேட்டர் ஒன்றை ஏற்றிக்கொண்டு அவுஸ்தி ரேலியாவை இவ் விமானம் சென்றடை ந்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி செக் குடியரசிலிருந்து இவ் விமானம் புறப்பட்டது.

இவ் விமானத்துக்கு 4,000 கிலோமீற்றருக்கு ஒரு தடவை எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் ஹைதராபாத் நகரிலும் இவ் விமானம் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply