தாய்லாந்தில் மீன் மழை பொழிந்ததாக அண்மையில் இணையத்தளங்களில் படங்களுடன் கூடிய செய்தியொன்று பரவியது.
ஆனால், அது உண்மையில் மீன் மழை அல்ல. அச் சம்பவம் இடம்பெற்றது தாய்லாந்திலும் அல்ல, சீனாவில் நடைபெற்ற சம்பவம் இது.
சீன நெடுஞ்சாலையொன்றில் மீன் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறியொன்றின் பின்புற கதவு திடீரென திறந்துகொண்ட தால் பல்லாயிரக்கணக்கான கிலோ மீன்கள் வீதியில் கொட்டப்பட்டன.
ஆனால், அங்கிருந்த பொதுமக்களும் பொலிஸ், இராணுவத்தினரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து அம் மீன்களை பழுதடையாமல் பாதுகாக்கும் விதமாக தண்ணீரை பாய்ச்சி மீன்களை சேகரித்தனர்.
இதனால் அப் பகுதி ஒரு குளம் போன்று காணப்பட்டது.
இவ் விடயத்தையே பலர் திரித்து, தாய்லாந்தில் மீன் மழை என தகவல் வெளியிட பல நாடுகளின் ஊடகங்களில் அது செய்தியாக வெளியாகி யிருந்தது.