புதுடில்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கருத்துக் கணிப்புகளின் படி, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக சில சேனல்கள் தெரிவித்துள்ளன.

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிகிறது. அசாமில் முதல்முறையாக பா.ஜ., வும் கேரளாவில் இடதுசாரியும் ஆட்சியை பிடிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

கருத்துகணிப்பு விவரம்:

இந்தியா டுடே:

தமிழகம்:

மொத்த தொகுதிகள்: 234

தி.மு.க., கூட்டணி – 124- 140

அ.தி.மு.க., – 89-101

பா.ஜ., – 0-3

மற்றவை – 4-8

கேரளா:

மொத்த தொகுதிகள் – 140

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி – 38-48

இடதுசாரி கூட்டணி் – 88 – 101

பா.ஜ., – 0 – 3

மற்றவை – 1-4

மேற்குவங்கம்:

மொத்த தொகுதிகள்: 294

திரிணமூல் காங்கிரஸ் – 233-253

இடதுசாரி கூட்டணி – 38-51

பா.ஜ., – 1-5

மற்றவை – 2-5

புதுச்சேரி:

மொத்த தொகுதிகள் – 30

என்.ஆர். காங்கிரஸ் – 8-12

அ.தி.மு.க., – 1-4

தி.மு.க., கூட்டணி – 15-21

மற்றவை – 0-2

அசாம்:

மொத்த தொகுதிகள் – 126

பா.ஜ., கூட்டணி – 79-93

காங்கிரஸ் – 26-33

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கூட்டணி – 6-10

மற்றவை – 1-4

டைம்ஸ் நவ் கருத்துகணிப்பு விவரம்:

கேரளா:

மொத்த தொகுதிகள் – 140

இடதுசாரி கூட்டணி – 78

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி – 58

பா.ஜ., கூட்டணி – 2

மற்றவை – 2

அசாம்:

மொத்த தொகுதிகள் – 126

பா.ஜ., கூட்டணி – 57

இந்திய தேசிய காங்கிரஸ் – 41

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கூட்டணி – 18,

மற்றவை – 10

மேற்குவங்கம்:

மொத்த தொகுதிகள்: 294

திரிணமூல் காங்கிரஸ் – 167

இடதுசாரி கூட்டணி – 75

காங்கிரஸ் – 45

பா.ஜ., – 4

மற்றவை – 3

டைம்ஸ் நவ் ஔிரபரப்பிய சி ஓட்டர் கணிப்பில் அதிமுக 139, திமுக 78 இடங்களைப் பிடிக்கும் எனவும், ஏபிபி நியூஸ் கணிப்பில் அதிமுக 95, திமுக 132 இடங்களைப் பிடிக்கும் எனவும் ஔிபரப்பப்பட்டது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகள் சரியாக இருக்கும் என கூற முடியாது. பலமுறை தவறாக முடிவுகள் வந்துள்ளன. இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

Share.
Leave A Reply