யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை செவ்வாய்க்கிழமை(17) வீடொன்றில் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஆர் சேனநாயக்க தெரிவித்தார்.
இக்கஞ்சாவினை வீட்டில் உடமையாக வைத்திருந்ததாக 48 வயதுடைய விபுலானந்தா வீதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகலொன்றின் பிரகாரம் வீடொன்றினை சோதனையிட்ட போது குறித்த கஞ்சாவுடன் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
குறித்த கேரளா கஞ்சாவினை மீட்கப்பட்ட வீட்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.6 பார்சல்களாக பொதி செய்யப்பட்ட நிலையில் கேரளா பத்திரிகையினால் இக்கஞ்சா சுற்றப்பட்டிருந்தது.
இத்தேடுதல் நடவடிக்கையானது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மதவல ஆகியோரது ஆலோசனையில் இடம்பெற்றுள்ளது.
இச்சுற்றி வளைப்பில் உப பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர,பொலிஸ் சார்ஜன்ட் விமலதர்ம, சில்வா, எதிரிமான்ன, பொலிஸ் கன்ஸ்டபிள்களான திசாநாயக்க, ஜயதிலக, சோக், அமலதாஸ், எதிரிசிங்க, ஜயசேகர, மற்றும் பெண் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் பங்கெடுத்தனர்.
மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ரூபா 20 இலட்சத்திற்கு அதிகமானது என நம்பப்படுகின்றது.