நடிகர் சங்க தேர்தலில் ராதாரவியும், விஷாலும் ஒருவரையொருவர் எதிர்த்து நின்றனர். தற்போது ராதாரவி மிகவும் மரியாதைக்குரியவர் என்று அவரைப் பற்றி விஷால் புகழ் பாடி உள்ளார்.

நடிகர் சங்க தேர்தலில் விஷாலும், ராதாரவியும் எதிரெதிர் துருவங்களாக நின்று செயல்பட்டனர். விஷாலை பற்றி ராதாரவியும், ராதாரவியை பற்றி விஷாலும் ஒருவருக்கொருவர் வசைபாடிக் கொண்டனர்.

தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து ‘மருது’ என்கிற படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ராதாரவியுடன் இணைந்து நடித்தது குறித்து விஷால் கூறும்போது, ‘மருது’ படத்தில் ராதாரவி அண்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

முத்தையா என்னிடம் கதை சொன்ன போது அந்த கதாபாத்திரத்துக்கு ராதாரவி அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும். உங்களுக்கு எப்படி என்று தயங்கியபடி கேட்டார். இதை ஏன் கேட்கத் தயக்கம்? யார் தேவையோ அவர்களை நடிக்க வையுங்கள், தயங்காதீர்கள் நடிக்கட்டுமே, என்றேன்.

இதுவரை நாங்கள் இணைந்து நடித்ததில்லை, நடிக்கட்டுமே என்றேன்.

நடிகர் சங்க தேர்தல் பிரச்சினையில் அவர் எதிர் தரப்பில் நின்றார் என்று பகைமை பாராட்டுவதும் அவர் முகத்தில் விழிக்கவே மாட்டேன் என்பதும் முட்டாள்தனம் என்பேன்.

நடிகர் சங்க தேர்தலில் அவர் ஒரு கோணத்தில் நின்றார், நான் ஒரு கோணத்தில் நின்றேன் அவ்வளவுதான்.

அவர் என் படத்தில் நடிப்பது பற்றி படக்குழுவுக்கு மட்டுமல்ல வேடிக்கை பார்க்க வந்த மக்களுக்கும்கூட எதிர்பார்ப்பு பரபரப்பு இருந்தது. நாளைக்கு வருகிறார்.

இன்றைக்கு வருகிறார் என்ன நடக்கப்போகிறதோ என்று  எதிரிகளைப் போல விறுவிறுப்பு காட்டினார்கள். ராதாரவி அண்ணன் வந்தார் நடித்தார். அவர் சிறந்த அனுபவம் உள்ள நடிகர்.

சங்கம் வேறு; நடிப்பு வேறு. சங்கம் வேறு; தொழில்வேறு இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ராதாரவி அண்ணன் வந்தார் என்னைக் கட்டிப் பிடித்தார்.

இப்போது நிறைய தொடர்ச்சியாக படங்கள் நடிக்கிறேன். வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நடிகர் சங்கத்துக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் சொல்லுப்பா செய்றேன் என்றார். அவர் ஒரு மூத்த நடிகர். அவர் மரியாதைக்குரியவர் என்பதை என்றும் நான் மறந்ததில்லை.

இவ்வாறு விஷால் கூறினார்.

ராதரவி விஷாலை    “டேய் பரதேசி நாயே’‘ என்று  மேடையில் சொன்னதை விஷால் மறந்தாலும்  தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள். சினிமா கூத்தாடிகளுக்கு பணம்தானே முக்கியம்.

Share.
Leave A Reply