விலை உயர்ந்த ஆடம்பர கடிகாரங்களுக்கு பேர்போன ஸ்வீடன் நாட்டில் பூட்டிக்கிடக்கும் கடிகாரக் கடையை சூறையாடிய கொள்ளையர்கள் தங்களது திருவிளையாடலை ஒருவர் வீடியோவாக பதிவுசெய்வதை அறியாமல் பின்னர் போலீசாரிடம் அவர்கள் பிடிபட்ட வீடியோ மூன்றே நாட்களில் சுமார் 9 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் விலை உயர்ந்த ஆடம்பர கடிகார ஷோரூமை கடந்த 13-ம் தேதி ஸ்கூட்டரில் வந்த இரு கொள்ளையர்கள் உடைத்து திறக்கின்றனர்.
அவர்களில் ஒருவன் கைத்துப்பாக்கியுடன் வாசலில் காவலுக்கு நிற்க, பெரிய பிளாஸ்டிக் கோணிப்பையில் உள்ளே இருந்த பலகோடி மதிப்பிலான கைக்கடிகாரங்களை இன்னொருவன் அள்ளித் திணித்துக் கொள்கிறான்.
இந்த காட்சிகளை எல்லாம் ஓரத்தில் நின்று ஒருவர் தனது செல்போனால் படம்பிடிப்பது தெரியாமல் கொள்ளையடித்த இரு பைகளுடன் ஸ்கூட்டரில் ஏறி தப்பிச் செல்லும்போது பின்னால் அமர்ந்திருப்பவன் தனது கைதுப்பாக்கியால் வணிக வளாகத்தின் கூரையை நோக்கிசுட்டு அங்கிருப்பவர்களை மிரட்ட முயல்கிறான்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவனது துப்பாக்கி இயங்காமல் போகவே, இருவரும் அங்கிருந்து எப்படியோ தப்பிச் செல்கின்றனர்.
இதுபற்றிய தகவல் மின்னல் வேகத்தில் பரவ, திருடப்பட்ட கடையின் அருகாமையில் உள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்தின் அருகே அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்த போலீசார்,
அவர்களை கைது செய்தனர். இந்த வீடியோ காட்சி வெளியான மூன்றே நாட்களில் சுமார் 9 லட்சம் பேர் இதைப் பார்த்து ரசித்துள்ளனர்.
அந்த காமெடி வீடியோவைக் காண..,