கன்னட நடிகை மைதிரியா கௌடாவிற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: நடிகை மைதிரியா கௌடா தனது சகோதரி சுப்ரியா மற்றும் தனது உறவினர்கள் ரூபா மற்றும் ரேகாவுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

மைதிரியா கைப்பேசியில் பேசியபடி கார் ஒட்டியைத் கண்ட போக்குவரத்து தலைமைக் காவலர் சிவக்குமார் காரை நிறுத்தியுள்ளார்.

அந்த இடத்தில் மைதிரியாவிற்கும், தலைமைக் காவலர் சிவக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும், அப்போது மைத்ரியா உள்ளிட்ட நான்கு பெண்களும் காவலர் சிவக்குமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கில் நடிகை மைத்ரியாவிற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்தது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதேபோல் மற்ற மூன்று பெண்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக போக்குவரத்து காவலரை தாக்கிய வழக்கில் மைத்ரியாவின் சகோதரி உள்ளிட்ட 3 பெண்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.>

Share.
Leave A Reply